இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

தக்காளி விலை கிலோ 50 காசு: ராயலசீமாவில் வாங்க ஆளில்லை

ஆந்திராவில் தக்காளி யை வாங்க வியாபாரிகள் முன்வராததால், மாடுகளுக்கும், குப்பை தொட்டியிலும் விவசாயிகள் கொட்டி வருகின்றனர்.ஆந்திர மாநிலம், ராயலசீமா பகுதியிலுள்ள சித்தூர் மாவட்ட மதனபள்ளியில் 18 ஆயிரம் ஏக்கர், கர்நூல் மாவட்ட எம்மிகனூரில் 17 ஆயிரம் ஏக்கர், கடப்பா மாவட்டத்தில், 6,000 ஏக்கரிலும் தக்காளி பயிர் செய்யப்பட்டுள்ளது.கடந்த நவம்பர், டிசம்பர் வரை, கிலோ 25 முதல் 30 ரூபாய்க்கு விற்பனையான தக்காளி, தற்போது ஒரு ரூபாயிலிருந்து 50 பைசாவுக்கு, விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. 100 கூடை தக்காளி அறுவடை செய்ய, ஆறு பேருக்கு தலா 60 ரூபாய் கூலி மற்றும் வாகன செலவாக 225 ரூபாய் ஆகிறது. இதனால், தக்காளியை மாடுகளுக்கும், குப்பையிலும் விவசாயிகள் கொட்டி வருகின்றனர்

குறிச்சொற்கள்: , , ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment