இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

நெற்பயிரில் புகையான் தாக்குதல் : இழப்பீடு வழங்க கோரிக்கை

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி பகுதியில் நெற்பயிரில் புகையான் தாக்குதலால் அதிகமாக உள்ளது. இதை தடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட விளைநிலங்களுக்கு அரசு இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என்று மணமேல்குடி ஒன்றியக்குழு துணைத்தலைவர் சீனியார் அரசுக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார். அவர் அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது : மணமேல்குடி ஊராட்சி பகுதிகளில் அனைத்து பகுதிகளிலும் நெல் பயிரிடப்பட்டு உள்ளது. இந்த ஆண்டு பருவமழை நன்கு பெய்து ஏரி, குளம், கண்மாய்கள் நிரம்பி உள்ளது. இந்நிலையில் நெற்பயிர்கள் செழித்து வளர்ந்து கதிர்மணிகள் உருவாகும் தருணத்தில் புகையான் பூச்சி விழுந்து பயிர்கள் கருக தொடங்கிவிட்டன. சுமார் 20 ஆயிரம் பயிர்கள் அனைத்தும் புகையான் பூச்சி தாக்கி நாசமாகி வருகிறது. எனவே வேளாண்மை துறை அலுவலர்களை ஒன்றிய பகுதிகளில் உள்ள கிராமங்களுக்கு அனுப்பி புகையான் பூச்சியை ஒழித்து பயிர்களை காப்பாற்ற உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் புகையானால் பாதிக்கப்பட்டு நஷ்டமடைந்து வரும் விவசாயிகளுக்கு பயிர்பாதுகாப்பு இன்சூரன்ஸ் திட்டத்தின் மூலம் புகையான் பூச்சியால் ஏற்படும் நஷ்டத்தை கணக்கெடுத்து இழப்பீட்டு தொகை வழங்க அரசு ஆவண செய்ய வேண்டும் என்று கோரிக்கை மனுவில் மணமேல்குடி ஒன்றியக்குழு துணைத்தலைவர் சீனியார் தெரிவித்துள்ளார். இந்த மனுக்கள் கலெக்டர், மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் ஆகியோருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

குறிச்சொற்கள்: , , ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment