இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

புகையிலை அறுவடை தீவிரம்: விலை ஏற்றத்தால் விவசாயிகள் 'மகிழ்ச்சி'


சத்தியமங்கலம் பகுதியில் புகையிலை அறுவடை தீவிரமாக நடக்கிறது. கடந்த காலத்தை விட தற்போது விலை அதிகரித்துள்ளதாலும், விளைச்சல் நல்லபடியாக இருப்பதாலும் புகையிலை விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.


சத்தியமங்கலம், டி.ஜி., புதூர், சதுமுகை, ஆலாம்பாளையம் மற்றும் பவானிசாகர் பகுதியில் 25 ஆயிரம் ஏக்கருக்கு மேல் புகையிலை பயிரிட்டுள்ளனர். கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் புகையிலை பயிரிட்டுள்ளது அதிகரிக்கப்பட்டுள்ளது. பொதுவாக புகையிலை நாற்று விதைத்த நாளில் இருந்து 40 நாளில் அதை பிடுங்கி ஏக்கர் ஒன்றுக்கு 7, 500 நாற்றுக்கள் என்ற எண்ணிக்கையில் நடவு செய்ய வேண்டும். நடவு செய்யப்பட்ட 80 நாளில் இருந்து 90 நாளுக்குள் புகையிலை செடியில் வரும் கொழுந்தை கிள்ளி விட வேண்டும். பத்து நாட்களுக்கு ஒரு முறை என்ற கணக்கில் நான்கு முறை புகையிலை செடியின் கொழுந்தை கிள்ள வேண்டும். நடவு செய்யப்பட்ட நாளில் இருந்து 120 முதல் 130 நாட்களில் புகையிலை அறுவடைக்கு தயாராகி விடுகிறது.



அதன்பின் வயல்காட்டில் இருந்து வெட்டி எடுக்கப்பட்ட புகையிலை செடியை பந்தல் அமைத்து அதில் சூரிய வெப்பம் படும்படி காய வைக்கின்றனர். 25 நாள் காய வைத்த பிறகு காய்ந்த புகையிலை செடிகளை ஒன்றின்மேல் ஒன்று அடுக்கி அதை பதப்படுத்துகின்றனர். முப்பது நாட்கள் பதப்படுத்தியபிறகு விற்பனைக்கு தயாராகி விடுகிறது. நடப்பாண்டில் புகையிலை நன்றாக மகசூல் கிடைத்துள்ளதாக புகையிலை விவசாயிகள் கூறுகின்றனர்.



கடந்தாண்டு ஒரு ஏக்கருக்கு 950 கிலோ கிடைத்த புகையிலை தற்போது ஏக்கர் ஒன்றுக்கு 1,100 முதல் 1,300 கிலோ வரை மகசூல் கிடைத்துள்ளதாக கூறுகின்றனர். கடந்த ஆண்டு கிலோ ஒன்று ரூ. 40க்கு விற்பனையான புகையிலை தற்போது கிலோ ஒன்று ரூ. 60க்கு விற்பனையாகிறது. மேலும் புகையிலை விலை அதிகரிக்கலாம் என்று வியாபாரிகள் கருத்து தெரிவிப்பதால் புகையிலை விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.


குறிச்சொற்கள்: , , ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment