இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

ஒரு கிலோ தக்காளி 6 ரூபாய்!



திருப்பூர் வடக்கு உழவர் சந்தையில் ஒரு கிலோ தக்காளி நேற்று ஆறு ரூபாய்க்கு விற்கப்பட்டது. வடக்கு உழவர் சந்தைக்கு பெருமாநல்லூர், நம்பியூர், அவிநாசி, தெக்கலூர், ஊத்துக்குளி பகுதிகளில் இருந்து, ஐந்து பஸ்களில் காய்கறிகள் வருகின்றன. சந்தைக்கு வரும் காற்கறிகள் முழுமையாக விற்றுத் தீர்கின்றன. கீரை வகை மற்றும் கொத்தமல்லி மட்டுமே மீதமாகின்றன. அவை, குளிர்சாதன அறையில் பாதுகாக்கப் படுகின்றன; 600 முதல் 700 கிலோ வரையிலான மல்லி, கறிவேப்பிலை, கீரை வகைகள் இருப்பு வைக்கப்படுகின்றன. நேற்று, கத்தரிக்காய் கிலோ 16 ரூபாய்; தக்காளி 6; வெண்டை 14; புடலை 10,12; பாகல் 15; பீர்க்கன்காய் 22; சுரைக்காய் 8; கொத்தவரை 13; பச்சை மிளகாய் 20; சம்பா 16; பட்டை அவரை 14, பெல்ட் அவரை 16, டிஸ்கோ 18; முள்ளங்கி 8; சிவப்பு முள்ளங்கி 12; தேங்காய் 10; வாழைக்காய் 15; கீரை வகைகள் 15; கறிவேப்பிலை 25 ரூபாய் என விற்பனையானது. மரவெள்ளி கிழங்கு 7 ரூபாய்; பெரிய வெங்காயம் 18; சின்ன வெங்காயம் 12 முதல் 18 வரை; உருளை 16; கேரட் 20 முதல் 25 வரை; பீட்ரூட் 15; சேனை 18; முருங்கை 40; பீன்ஸ் 22; புஸ் பீன்ஸ் 25; கோஸ் 8 முதல் 10 வரை; காலிபிளவர் 12; மேரக்காய் 12; இஞ்சி 35 முதல் 40 வரை; பூண்டு 90; எலுமிச்சை 35; புளி 40; பொரியல் தட்டை 14 ரூபாய் என விற்கப்பட்டது. தென்னம்பாளையம் காய்கறி மார்க்கெட்டுக்கு நேற்று தர்பூசணி வரத்து அதிகமாக இருந்தது. பொங்கலூர், பல்லடம் பகுதிகளில் இருந்து 12 டன் அளவுக்கு தர்பூசணி பழங்கள் விற்பனைக்கு வந்திருந்தன. வெளிமார்க்கெட்டில் கிலோ 7 முதல் 8 ரூபாய் வரை விற்கப்படுகிறது. நேற்று வரத்து அதிகமாக இருந்ததால், கிலோ 3 முதல் 5 ரூபாய் வரை விற்றது. தள்ளுவண்டிகளில் "பீஸ்' போட்டு விற்பதில், எவ்வித விலை குறைவும் ஏற்படவில்லை

குறிச்சொற்கள்: , , ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment