இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

பூட்​டிக் கிடக்கும் துணை வேளாண்மை விரிவாக்க மையம்


விழுப்புரம் மாவட்டம் திருநாவலூர் ஒன்றியம் சேந்தநாடு கிராமத்தில் உள்ள துணை வேளாண்மை விரிவாக்க மையம் தற்போது செயல்பாடுகளின்றி சமூக விரோதச் செயல்கள் நடைபெறும் இடமாக மாறியுள்ளது.விழுப்புரம் மாவட்டம் திருநாவலூர் ஒன்றியம் கெடிலத்தில் வேளாண்மை விரிவாக்கம் மையம் அமைந்துள்ளது.​ இந்த மையத்தில் வேளாண்மை உதவி இயக்குநர் தலைமையில் அதிகாரிகள் பலர் பணிபுரிந்து வருகின்றனர்.​ இந்த மையம் வடமேற்கு பகுதியில் கடைகோடியில் அமைந்துள்ளதால் தொலைதூர கிராமங்களான எலவத்தடி,​​ தொப்பையான்குளம்,​​ ஒடப்பன்குப்பம்,​​ விஜயகுப்பம்,​​ கல்லமேடு,​​ வானாம்பட்டு,​​ மட்டிகை,​​ ஒல்லியாம்பாளைம்,​​ சேந்தநாடு,​​ ஆண்டிக்குழி,​​ மணலூர்,​​ கிழக்குமருதூர் உள்பட 30-க்கும் மேற்பட்ட கிராமங்கள் தங்களுக்குத் தேவையான விதைகள்,​​ ​ உரங்கள் மற்றும் விவசாய உபகரணங்கள் ஆகியவற்றை வாங்குவதற்காக 25 கிலோ மீட்டர் தூரமுள்ள கெடிலம் வேளாண்மை விரிவாக்க மையத்துக்கு சென்றுதான் பொருள்களை பெற்றுவந்தனர்.இதனால் விவசாயிகள் படும் துயரங்களை கண்டு தமிழக அரசு விவசாயிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் கோரிக்கையை ஏற்று திருநாவலூர் ஒன்றியம் சேந்தநாடு கிராமத்தில் வேளாண்மை உதவி இயக்குநரின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கக்கூடிய,​​ துணை வேளாண்மை அலுவலர் தலைமையில் உதவி வேளாண்மை அலுவலர்கள் 3 பேர் மற்றும் ஒரு காவலர் உள்பட அலுவலர்களை நியமனம் செய்து கட்டட வசதிகளுடன் பல ஆண்டுகளுக்கு முன் சேந்தநாடு துணை வேளாண்மை விரிவாக்க மையம் உதயமானது.இந்த மையம் தொடக்கத்தில் சில ஆண்டுகள் செயல்பட்டது.​ கடந்த 8 ஆண்டுகளாக இந்த மையம் பூட்டப்பட்டு கிடக்கிறப்.​ அலுவலகத்துக்கு யாரும் வருவதில்லை என்கின்றனர்.​ பல ஆண்டுகளாக செயல்படாமல் பழுதடைந்து உள்ளதால் இந்த அலுவலகத்தை மறைத்து அதன் முன்பு கோழி இறைச்சிக் கடை,​​ பழக்கடை,​​ பூக்கடை மற்றும் செருப்புக்கடை உள்ளிட்ட கடைகளை வைத்து வேளாண்மை அலுவலகத்தை சிலர் ஆக்கிரமித்துள்ளனர்.​ ஒரு சிலர் இந்த மையத்தை இரவு நேரங்களில் மது குடிக்கும் இடமாகவும்,​​ வேறு சிலர் தவறான நடவடிக்கைகளுக்கு ஏற்ற இடமாகவும் இந்த அலுவலகத்தை பயன்படுத்திக் கொள்கின்றனர். விவசாயிகள் சேந்தநாடு ராஜேந்திரன்,​​ மைலங்குப்பம் பாலகிருஷ்ணன் ஆகியோர்களிடம் கேட்டபோது:​ சேந்தநாடு கிராமத்தில் துணை வேளாண்மை விரிவாக்கம் மையம் இருந்தபொழுது இப்பகுதியிலுள்ள 30-க்கும் மேற்பட்ட கிராமங்கள் பயன் அடைந்தனர்.​ இந்த மையம் தற்பொழுது செயல்படாமல் மூடிக் கிடப்பதால் இப்பகுதி விவசாயிகள் விதை உள்ளிட்ட விவசாயப் பொருள்களுக்கு பண்ருட்டி வட்டம் திருவிதிகை,​​ திருவெண்ணெய்நல்லூர்,​​ உளுந்தூர்பேட்டை,​​ திருநாவலூர் ஆகிய ஊர்களுக்கு பல மணி நேரம் பயணம் செய்து பணத்தை விரயம் செய்து மிகுந்த சிரமத்துக்கிடையே வாங்கி வரவேண்டிய நிலை உள்ளது.​ மேலும் வேளாண்மை அலுவலர்கள் இப்பகுதிக்கு வந்து விவசாயிகளுக்கு வேளாண் தொழில்நுட்பம் குறித்து போதிய அறிவுரைகளை வழங்கவில்லை.​ இதனால் விவசாயிகளே பயிர் செய்வதால் எந்தப் பருவத்தில் என்ன விதைக்க வேண்டும்?​ எந்த வகையான மருந்து அடிக்க வேண்டும் என்பது தெரியவில்லை.​ ஏற்கெனவே ஏக்கருக்கு 30 மூட்டைகள் முதல் 40 மூட்டைகள் நெல் கிடைத்த நிலத்தில் தற்பொழுது 15 மூட்டைகள் மட்டுமே கிடைக்கிறது என்றனர். தமிழக விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் சந்துரு சங்காரம் கூறியது:​ 30-க்கும் மேற்பட்ட கிராம மக்களின் நலன் கருதி சேந்தநாடு துணை வேளாண்மை விரிவாக்க மையக் கட்டடத்தை செப்பனிட்டு போர்க்கால அடிப்படையில் திறக்க தமிழக முதல்வர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.​ தவறும் பட்சத்தில் அப்பகுதி விவசாயிகளை ஒன்று திரட்டி உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவோம் என்றார். திருநாலூர் வேளாண்மை உதவி இயக்குநர் ரவீந்திரன் கூறியது:​ இந்த துணை வேளாண்மை விரிவாக்க மையம் கட்டட வசதி சரியின்மை காரணமாக கடந்த 8 ஆண்டுகளாக செயல்படாதது உண்மைதான்.​ முதலில் அலுவலகத்தைச் சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி பொதுப்பணித் துறையினர் கட்டடத்தை செப்பனிட்டு கொடுத்தால் மிக விரைவில் அலுவலகத்தை திறப்பதற்கு நடவடிக்கை எடுப்போம் என்றார்.

குறிச்சொற்கள்: , , ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment