இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

நெகமம் கொப்பரை ஏலம் ஒரு கிலோ 33.60 ரூபாய்பொள்ளாச்சி அருகி நெகமத்தில் நடந்த கொப்பரை ஏலத்தில் ஒரு கிலோவுக்கு அதிகபட்சமாக 33.60 ரூபாய் விலை கிடைத்தது.நெகமம் சுற்றுப்பகுதி விவசாயிகள் 12 பேர், ஒழுங்குமுறை விற்பனைக்கூட ஏலத்திற்கு 60 மூட்டை கொப்பரையை ஏலத்திற்கு கொண்டு வந்தனர். மொத்தம் நான்கு வியாபாரிகள் கொப்பரையை தரம் பிரித்து ஏலம் கூறினர். ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் சண்முகம் ஏலம் நடத்தினார்.முதல் தர கொப்பரை 35 மூட்டையில், கிலோவுக்கு குறைந்தபட்சம் 30.80 ரூபாய் முதல், அதிகபட்சம் 33.60 ரூபாய் வரை விலை கிடைத்தது. இரண்டாம் தர கொப்பரை 25 மூட்டையில், கிலோவுக்கு குறைந்தபட்சம் 24.25 ரூபாய் முதல், அதிகபட்சம் 27 ரூபாய் வரை விலை கிடைத்தது.அதிகாரிகள் கூறுகையில், "வெளிமார்க்கெட்டில் கொப்பரை விலை குறைந்துள்ளதால், தற்போதுள்ள தேங்காயை கொப்பரை உற்பத்தியாளர்கள் இருப்பு வைத்துள்ளனர். இதனால் நெகமத்திற்கு இந்தவாரம் கொப்பரை வரத்து குறைவாக உள்ளது. கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது வரத்து 50 சதவீதம் குறைந்துள்ளது. ஆனால் கொப்பரை விலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை' என்றனர்.

குறிச்சொற்கள்: , , ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment