இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

நெல் குவிண்டாலுக்கு ரூ.​ 1,400 வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்


தஞ்​சா​வூ​ரில் சனிக்கிழமை நெல் குவிண்டாலுக்கு ரூ.​ 1,400 வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.​ ​ தமிழ்நாடு விவசாயிகள் சங்க தஞ்சாவூர் மாவட்ட குழு சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலக பனகல் கட்டடம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலர் சாமி.​ நடராஜன் தலைமை வகித்தார்.​ மாநிலத் தலைவர் கே.​ பாலகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார்.​ ​ ஆர்ப்பாட்டத்தில் கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூ.​ 2,000 அறிவிக்க வேண்டும்.​ கடந்த ஆண்டு பயிர்க்காப்பீடு செய்த விவசாயிகளுக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய காப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.​ ​ ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத் தலைவர் கே.​ காமராஜ்,​​ மாவட்டப் பொருளாளர் ஏ.​ கோவிந்தசாமி,​​ மாவட்ட நிர்வாகிகள் ஆர்.​ ராமச்சந்திரன்,​​ எம்.​ பழனிஅய்யா,​​ எஸ்.​ சாம்பசிவம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

குறிச்சொற்கள்: , ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment