விவசாயிகளுக்கு வட்டியில்லாத கடன் வழங்க கோரிக்கை
2:15 AM செய்திகள், விவசாயிகளுக்கு வட்டியில்லாத கடன் வழங்க கோரிக்கை 0 கருத்துரைகள் Admin
ராஜபாளையம் : தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட கூட்டம், ராஜபாளையத்தில் நடந் தது. மாநில துணைத் தலைவர் ரகுபதி ராஜா தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் ராமச்சந்திர ராஜா வரவேற்றார். சங்க நிறுவனர் சி.நாராயணசாமிக்கு நினைவு அஞ்சலி செலுத்தினர்.
தீர்மானங்கள்: தேசிய வேளாண்மை கமிஷன் தலைவர் சுவாமிநாதனின் பரிந்துரைகளை மத்திய அரசு அமல்படுத்த வேண்டும். விவசாயிகளின் உற்பத்தி செலவுகளுக்கு கூடுதல் மானியம் வழங்க வேண்டும். மாநில அரசைப் போல் மத்திய அரசும், தேசியமயமாக்கப் பட்ட வங்கிகளில் விவசாயப் பணிகளுக்கு வட்டியில்லாத கடன் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்களை நிறைவேற்றினர். நகர செயலாளர் முருகேசன், நிர்வாகிகள் பலராம் ராஜா, குமரேசன், பாலகிருஷ்ணன் கலந்து கொண்டனர். மாவட்ட செயலாளர் அம்மையப்பன் நன்றி கூறினார்.
குறிச்சொற்கள்: செய்திகள், விவசாயிகளுக்கு வட்டியில்லாத கடன் வழங்க கோரிக்கை
பகிர்தல் மிக எளிமையானது,அழகானது