இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட நடவடிக்கை : நாகை கலெக்டர் தகவல்

நாகை மாவட்டத்தில் 230 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் வாயிலாக விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று கலெக்டர் முனியநாதன் தெரிவித்துள்ளார்.



இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நாகை மாவட்டத்தில் தமிழக அரசின் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ் நடப்பு பருவத்தில் நுகர்பொருள் வாணிபக்கழகம் வாயிலாக நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. 65 நெல் கொள்முதல் நிலையங்கள் உள்ளன. தற்போது 165 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட உள்ளது. கடந்த 23ம் தேதி வரை ஆயிரத்து 637 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. நாகை தாலுகாவில் 38, கீழ்வேளூர் தாலுகாவில் 28, திருக்குவளை தாலுகாவில் 21, வேதாரண்யம் தாலுகாவில் 21, மயிலாடுதுறை தாலுகாவில் 54, தரங்கம்பாடி தாலுகாவில் 26, சீர்காழி தாலுகாவில் 42 இடங்கள் என மொத்தம் மாவட்டம் முழுவதும் 230 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.



மேலும் தேவைப்படும் இடங்களில் ஆய்வு செய்து கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும். ஈரப்பதம் 17 சதவீதம் வரை உள்ள கிரேடு "ஏ' ரக நெல்லுக்கு ஊக்கத்தொகையுடன் குவிண்டால் ஆயிரத்து 50 ரூபாய்க்கும், ஈரப்பதம் 17 சதவீதம் வரை உள்ள பொது ரக நெல்லுக்கு ஊக்கத்தொகையுடன் குவிண்டால் ஆயிரம் ரூபாய்க்கும் நெல் கொள்முதல் செய்யப்படும். நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பணியாற்றுபவர்களுக்கு 23, 24 தேதிகளில் நுகர்பொருள் வாணிபக்கழக முதுநிலை மண்டல மேலாளர் விஸ்வநாதன் தலைமையில் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டுள்ளது. எனவே நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் தங்கள் நெல்லை விற்பனை செய்வதில் ஏதேனும் குறைகள் இருந்தால் முதுநிலை மண்டல மேலாளர் நாகப்பட்டினம் 9443342843, 04365– 251843, 251313 மற்றும் மேலாளர் (தரக்கட்டுப்பாடு) 9443488843 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

குறிச்சொற்கள்: ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment