கலப்பட விதைகளால் விவசாயிகள் தவிப்பு
2:08 AM கலப்பட விதைகளால் விவசாயிகள் தவிப்பு, செய்திகள் 0 கருத்துரைகள் Admin
மானாமதுரை : தனியார் மையங்களில் கலப்பட நெல் விதை விற் கப்படுவதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மானாமதுரை, கட்டிக் குளம்,கொம்புக்காரனேந்தல் பகுதிகளில் 2,000 ஏக்கரில் நெல் நடவு செய்யப்பட்டுள்ளது. பால் பிடிக்கும் பருவத்தில் இருக்க வேண்டிய பயிரில், வெறும் தாள் களாக உள்ளன. கலப்படம்: நெற்கதிர் வளர்ச்சியில் வித்தியாசம் உள்ளது. ஒரே வயலில் பயிர், முற்றிய கதிர், பதர் என பல நிலையில் இருப்பதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தீத்தான்பேட்டை விவசாயி எழுமலைராஜன் கூறியதாவது: கோ.46, ஐ.ஆர்., 50 பயிரிட்ட நிலங்களில் ஒழுங் கற்ற வளர்ச்சி உள்ளது. விதை நெல் கலப்படத்தால், ஏக்கருக்கு 10 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்துள்ளோம். கலப்படத்தால் கடந்த ஆண்டும் பாதிக்கப்பட் டோம். இந்த ஆண்டு மகசூல் கிடைக்காது. கலப்பட விதை உற்பத்தியாளர், ஆய்வு செய்யாமல் சான்று அளித்த விவசாய அதிகாரி, விற்பனை மையங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்
குறிச்சொற்கள்: கலப்பட விதைகளால் விவசாயிகள் தவிப்பு, செய்திகள்
பகிர்தல் மிக எளிமையானது,அழகானது