இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....
Subscribe
Enter your email address below to receive updates each time we publish new content.
தஞ்சாவூரில் சனிக்கிழமை நெல் குவிண்டாலுக்கு ரூ. 1,400 வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு விவசாயிகள் சங்க தஞ்சாவூர் மாவட்ட குழு சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலக பனகல் கட்டடம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலர் சாமி. நடராஜன் தலைமை வகித்தார். மாநிலத் தலைவர் கே. பாலகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூ. 2,000 அறிவிக்க வேண்டும். கடந்த ஆண்டு பயிர்க்காப்பீடு செய்த விவசாயிகளுக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய காப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத் தலைவர் கே. காமராஜ், மாவட்டப் பொருளாளர் ஏ. கோவிந்தசாமி, மாவட்ட நிர்வாகிகள் ஆர். ராமச்சந்திரன், எம். பழனிஅய்யா, எஸ். சாம்பசிவம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.