இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

தென்னை காப்பீட்டுத் திட்டத்தில் திருப்பூர் சேர்க்கப்பட்டுள்ளது: தமிழக அரசு


தென்னை காப்பீட்டுத் திட்டத்தில் திருப்பூர் மாவட்டம் ஏற்கெனவே சேர்க்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு விளக்கமளித்துள்ளது.

"தென்னை காப்பீட்டுத் திட்டத்தில் தவிர்க்கப்பட்ட திருப்பூர் மாவட்டம்" என்று செய்தி "தினமணி'யில் திங்கள்கிழமை (ஆக. 30) வெளியாகி இருந்தது.

அதற்குப் பதிலளிக்கும் வகையில் தமிழக அரசு திங்கள்கிழமை வெளியிட்ட விளக்கம்:

தமிழகத்தில் 3.834 லட்சம் ஹெக்டேர் பரப்பில் தென்னை பயிரிடப்பட்டுள்ளது. கொச்சியில் உள்ள தென்னை வளர்ச்சி வாரியத்தின் அறிவுறுத்தலின்படி 2009-10-ல் தென்னை பயிர்க் காப்பீட்டுத் திட்டம் அறிவிக்கப்பட்டது. இது தொடர்பாக 22-3-2010 அன்று அரசாணை வெளியிடப்பட்டது.

முன்னோடித் திட்டமாக இது செயல்படுத்தப்பட உள்ளது என்பதால் தென்னை அதிகமாக பயிரிடும் மாவட்டங்களான கோவை, ஈரோடு, தஞ்சாவூர், திண்டுக்கல், கன்னியாகுமரி, வேலூர், தேனி, திருநெல்வேலி, கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய 10 மாவட்டங்களில் இத்திட்டத்தை செயல்படுத்த ஆணை பெறப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில் தென்னை வளர்ச்சி வாரியத்தின் பங்களிப்பு 50 சதவீதம், தமிழக அரசின் பங்களிப்பு 25 சதவீதம், விவசாயிகளின் பங்களிப்பு 25 சதவீதம் எனவும் நிர்ணயித்து ரூ. 2.65 கோடி செலவில் 2010-11 ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

திருப்பூர் மாவட்டமானது, கோவை, ஈரோடு மாவட்டங்களில் இருந்து பிரிக்கப்பட்ட புதிய மாவட்டமாகும். இத் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ள 10 மாவட்டங்களில் கோவையும், ஈரோடும் இடம் பெற்றுள்ளது. எனவே, திருப்பூர் மாவட்டத்தில் தென்னை காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படவில்லை என்று வெளியான செய்தி தவறானதாகும் என்று அரசின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

குறிச்சொற்கள்: ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment