உள்ளூர் கட்டணத்தில் வெளிநாடுகளுக்கு பேசும் வசதி: வீடியோகான்
12:28 AM வர்த்தகம் 1 கருத்துரைகள் Admin
செல்போன் சேவையில் ஈடுபட்டுள்ள வீடியோகான் நிறுவனம் இப்போது உள்ளூர் கட்டணத்தில் வெளிநாடுகளில் உள்ளவர்களுக்குப் பேசும் வகையில் கட்டணத்தைக் குறைத்துள்ளது.
இதன் மூலம் அமெரிக்காவில் உள்ளவர்களுடன் ஒரு நொடிக்கு ஒரு பைசா கட்டணத்தில் தொடர்பு கொள்ள முடியும் என்று இத்திட்டத்தை அறிமுகப்படுத்திய நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி அரவிந்த் சந்தானம் கூறினார்.
சென்னையில் செவ்வாய்க்கிழமை இப்புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி அவர் மேலும் கூறியது: வீடியோகான் நிறுவனம் சேவையைத் தொடங்கிய நான்கு மாதத்தில் 10 லட்சம் வாடிக்கையாளர்களைப் பெற்று சாதனை படைத்தது. தமிழகத்தில் மட்டும் 3,250 செல்போன் கோபுரம் மூலம் தடையற்ற செல்போன் சேவையை அளிக்கிறது. இந்நிறுவனம் 900-த்துக்கும் மேற்பட்ட நகரங்களில் கிளைகளை பரப்பி செயல்படுத்தி வருகிறது.
வெளிநாடுகளில் குறிப்பாக நியூயார்க், டொரண்டோ, கோலாலம்பூர், சிங்கப்பூரில் உள்ள உறவினர்கள், நண்பர்களுடன் பேசுவதற்கு வசதியாக கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவுக்கும், கனடாவுக்கும் ஒரு நொடிக்கு ஒரு பைசா கட்டணத்தில் பேச முடியும். இதேபோல ஒரு நிமிடத்துக்கு | 1.69 கட்டணத்தில் சிங்கப்பூர், மலேசியாவில் உள்ளவர்களுடன் பேசலாம்.
வீடியோகான் நிறுவனம் பிரீபெய்ட் கட்டண சேவையை மட்டுமே அறிமுகப்படுத்தியுள்ளது. இதனால் | 57 கட்டண கார்ட் மூலம் அமெரிக்கா, கனடாவில் உள்ளவர்களுடன் பேசலாம். சிங்கப்பூர், மலேசியாவில் உள்ளவர்களுடன் பேசுவதற்கு | 22 கட்டண கார்டு மூலம் பேசலாம்.
நடப்பு நிதி ஆண்டில் 5,000 செல்போன் கோபுரங்களை நிறுவ திட்டமிட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.
குறிச்சொற்கள்: வர்த்தகம்
பகிர்தல் மிக எளிமையானது,அழகானது
வீடியோகான் மொபைல் கடந்த ஒரு மாதமாக ரீச்சார்ஜ் ஏறுவதே இல்லை