இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

சாத்தூர் அருகே ரயில் தடம்புரண்டது: பயணிகள் தப்பியது எப்படி ? விபத்துக்கு காரணம் என்ன ?


சாத்தூர் அருகே கன்னியாகுமரி-ராமேஸ்வரம் ரயில் பெரும் விபத்தில் இருந்து தப்பியது. ரயில் தடம் புரண்டதையடுத்து தென்மாவட்டம் செல்லும் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்ப்பட்டன. பயணிகள் தங்களுடைய ஊருக்கு செல்ல முடியாமல் தத்தளிக்கும் நிலை ஏற்பட்டது. இருப்பினும் ரயில் பாதை சீரமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருவதாக ரயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கன்னியாகுமரியில் இருந்து ராமேஸ்வரத்திற்கு நேற்றிரவு எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டது. ரயிலை டிரைவர்கள் குமாரசாமி, பெஞ்சமின் ஓட்டி வந்தனர். விருதுநகர் மாவட்டம் சாத்தூருக்கு இரவு 1மணியளவில் வந்தது. சாத்தூரில் இருந்து புறப்பட்டு 1.06 மணிக்கு சாத்தூரில் இருந்து வெங்கடாஜலபுரம் எனும் இடத்தில் வந்த போது, ரயில் தண்டவாள இணைப்பு இரண்டு அடிக்கு நீளத்திற்கு உடைந்தது. இதனால் ரயில் இன்ஞ்சின் முன்பக்க சக்கரம் தண்டவாளத்தை விட்டு விலகி, சுமார் 800மீட்டர் தொலைவுக்கு வெளியே சென்றது. டிரைவர்களின் சாமர்த்தியத்தால் ரயில் பெட்டிகளும் எதுவும் கவிழவில்லை. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.


ரயிலில் சுமார் 1500 பயணிகள் பயணித்தனர். அவர்களில் யாருக்கும் சிறு காயம் கூட ஏற்படவில்லை. மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேற்கொள்ளப்பட்டுள்ளது. தண்டவாளங்கள் மதுரை ரயில்வே ஊழியர்கள் மூலம் சரிசெய்யப்பட்டு வருகிறது.


இந்த சம்பவத்தினால் சென்னையில் இருந்து தென்பகுதிக்கு வரும் அனைத்து ரயில்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. தென் மாவட்டத்தில் இருந்து வடக்கு நோக்கி செல்லும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில், கோவை- நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில், மும்பை நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில் விருதுநகரில் நிறுத்தி வைக்கப்பட்டன. கொல்லம் டூ மதுரை செல்லும் பாசஞ்சர் ரயில் சாத்தூரில் நிறுத்தப்பட்டன.


கொல்லம் டூ மதுரை செல்லும் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. நெல்லை எக்ஸ்பிரஸ், அனந்தபுரி எக்ஸ்பிரஸ் , மைசூர் எக்ஸ்பிரஸ் ரயில் மதுரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. காலையில் இருந்து 4 மணி நேரத்திற்கும் மேலாக ரயில் பயணிகள் ஆங்காங்கே தவித்தனர். சென்னையில் இருந்து விருதுநகர் வழியாக இன்று காலையில் செல்லும் தூத்துக்குடி மங்களூர், செங்கோட்டை எக்ஸ்பிரஸ், தென்காசி பாசஞ்சர் ரயில் மற்றும் சரக்கு ரயில்கள் அடியோடு பாதிக்கப்பட்டுள்ளன. காலை 9 .45 க்கு மேல் ஒவ்வொரு ரயில்களாக அனுப்பி வைக்கப்பட்டன.


சாத்தூர் அருகே ரயில் விபத்து நடந்ததும் பயணிகள் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து நின்றனர். அருகில் பஸ் வரும் சாலைக்கு அனைவரும் நடந்து சென்று தங்களுடைய பயணத்தை துவக்கினர். பயணிகள் மீட்டு உரிய பயணத்திற்கு செல்ல பஸ் போக்குவரத்தை ரயில்வே அதிகாரிகள் செய்யவில்லை என பயணிகள் குமுறினர். இது குறித்து விருதுநகர் ரயில்வே அதிகாரிகளிடம் கேட்டபோது எங்களுக்கு உயர் அதிகாரிகள் தரப்பில் இருந்து எதுவும் உத்தரவு வரவில்லை என்றனர்.

இதனிடையே ரயில் என்ஜினை மீட்பதற்காக மீட்பு பணியாளர்கள் ஆட்டோ ஒன்றில் வந்து கொண்டு இருந்தனர். அப்போது அவர்கள் வந்த ஆட்டோ மீது எதிர்பாரா விதமாக கார் ஒன்று மோதியது. இதில் கேங்மேன் மதுரை வீரன் என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார். உதவி இன்ஜினியர் ராமசுப்ரமணியன், டிராலி மேன் மாரியப்பன் ஆகியோர் காயமடைந்து மதுரையில் தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த ரயில் தண்டவாளம் உடைந்தும் ரயில் பெட்டிகள் கவிழாமல் இருந்தததால் பயணிகள் யாருக்கும் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை. பெரும் விபத்து எவ்வாறு தவிர்க்கப்பட்டது பயணிகள் உயிர் பிழைத்தது எப்படி என்ற விவரத்தை அங்குள்ள நமது தினமலர் நிருபர் தரும் தகவல் வருமாறு :


சாத்தூர் ரயில் நிலையத்தில் இருந்து 2 கி.மீட்டர் தூரத்தில் இந்த விபத்து நடந்திருகிறது. முதலில் தண்டவாளம் உடைந்து கிடந்ததால் ரயில் இன்ஞ்சின் இந்த இடத்தில் இருந்து 800 மீட்டர் தொலைவுக்கு இழுத்து சென்றுள்ளது. இதில் இன்ஞ்ஜின் 4 வீல் , சிலிப்பர் கட்டை மற்றும் கற்கள் மீது ஓடியது. ஆனால் அதிர்ஷ்டவசமாக ரயில் பெட்டிகள் எதுவும் தண்டவாளத்தை விட்டு அகலவில்லை என்பது தான் பெரும் உயிர்ச்சேதம் இல்லாமல் விபத்து முடிந்தது.


மேலும் 70 முதல் 80 கி.மீட்டர் வேகத்தில்தான் ரயில் வந்திருக்க வாய்ப்பு என்பதால் இன்ஞ்ஜின் 800 மீட்டர் தொலைவுக்குள் ரயில் நின்று விட்டது. வேகம் அதிகரித்து வந்திருந்தால் ரயில் கட்டுப்பாடு இழந்து பெட்டிகள் கவிழ வாய்ப்பு ஏற்பட்டிருக்கும் . என்கிறார் நமது நிருபர்.


சாத்தூர் அருகே உள்ள இந்த ரயில் பாதை நீண்ட காலமாக புதுப்பிக்கப்படாமல் இருப்பதால் இது போன்று ரயில் தண்டவாளத்தில் உடைப்பு ஏற்படுவதாக கூறப்படுகிறது. இந்த பாதையில் நாள் ஒன்றுக்கு 30 ரயில் வந்து செல்கிறது. குறிப்பாக சரக்கு ரயில்களே அதிகம். இநத தண்டவாளம் 80 ஆண்டுகள் பழமையானவை. எனவே பலம் இழந்து காணப்படுகிறது.இது குறித்து வர்த்தக சங்கத்தினர் ரயில்வே துறைக்கு ரயில்பாதை புதுப்பிக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளது . இது செவிடன் காதில் ஊதிய சங்காக போனது என்கின்றனர் இந்த சங்க பிரமுகர்கள்.


இந்த சம்பவத்தில் சதி வேலை என்ற கேள்விக்கு உரிய முகாந்திரம் இல்லை. ரயில் தண்டவாளம் உடைந்த இடத்தில் வெடிபொருட்களோ, திட்டமிட்டு நடத்தப்பட்டதற்கான அடையாளங்கள் எதுவும் இல்லை. எனவே சதித்திட்டம் இல்லை என உள்ளூர் போலீசார் தெரிவித்துள்ளனர்.

குறிச்சொற்கள்: , ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment