இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

தமிழகத்தில் ஈரோடு மாவட்டம் முதலிடம்-சொட்டு நீர்ப்பாசனத்துக்கு ரூ.3.85 கோடி

தமிழகத்தில் அதிகபட்சமாக ஈரோடு மாவட்டத்தில் சொட்டு நீர்ப்பாசனத்துக்கு 1,474 பேருக்கு 3.85 கோடி ரூபாய் மானியம் வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நிலவி வரும் வறட்சியால் சில ஆண்டுகளாக சொட்டு நீர்ப்பாசனத்துக்கு மாறும் விவசாயிகள் எண்ணிக்கை உயர்கிறது. தமிழகத்திலேயே ஈரோடு மாவட்டத்தில் தான் அதிகளவில் சொட்டு நீர் பாசனம் அமைக்கப்பட்டுள்ளது. சொட்டு நீர் பாசனம் அமைக்க ஆகும் செலவு, பயிரின் இடைவெளியைப் பொருத்து மாறுபடும். இடைவெளிக்கு ஏற்ப ஒரு ஹெக்டேருக்கு அனுமதிக்கப்பட்ட மானியம் மாறுபடுகிறது. கரும்பு, மஞ்சள், வாழை, மரவள்ளிக்கிழங்கு, காய்கறி பயிர்கள், தென்னை, பூக்கள், கொய்யா, மக்காச்சோளம் ஆகியவற்கை சொட்டு நீர்ப்பாசனம் மூலம் சாகுபடி செய்யலாம்.
ஊடுபயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு, இடைவெளிக்கேற்ப ஊடுபயிர் அல்லது முக்கிய பயிர் ஆகிய இரண்டில் ஏதாவது ஒன்றுக்கு தோட்டக்கலை துறை சார்பில் 65 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. சொட்டு நீர்ப்பாசன மானியமாக ஒரு விவசாயிக்கு குடும்பத்துக்கு அதிகபட்சமாக ஐந்து ஹெக்டேர் வரை மானியம் வழங்கப்படுகிறது.

ஈரோடு மாவட்ட தோட்டக்கலை துறை மூலம் சென்ற நிதியாண்டில் 1,474 பயனாளிக்கு 1,303 ஹெக்டேருக்கு, மூன்று கோடியே 85 லட்சத்து 29 ஆயிரத்து 161 ரூபாய் மானியம் வழங்கப்பட்டுள்ளது.தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ், 2010-11ல் துல்லியப் பண்ணைத் திட்டம் அமைக்க 360 ஹெக்டேர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக 20 பேர் கொண்ட குழு மூலம் பதிவு செய்து, ஒரு வட்டாரத்துக்கு ஒரு குழு அமைக்கப்படவுள்ளது. அதில் 20 சதவீதம் எஸ்.சி., மற்றும் எஸ்.டி., பிரிவினரும், 80 சதவீதம் பொது பிரிவினரும் தேர்வு செய்யப்படவுள்ளனர்.சென்ற நான்கு ஆண்டுகளில் மாவட்டத்தில் 11.50 கோடி ரூபாய் சொட்டு நீர்ப்பாசன மானியம் வழங்கப்பட்டு, மாநிலத்தின் முதன்மை மாவட்டமாக ஈரோடு மாவட்டம் திகழ்கிறது.

குறிச்சொற்கள்:

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment