இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

செம்மைநெல் சாகுபடி இலக்கினை எட்ட முடியாததற்கு காரணம் ?

தொழிலாளர்கள் பற்றாக்குறை காரணமாக செம்மை நெல் சாகுபடி செய்வதில் கடந்த ஆண்டு இலக்கினை எட்ட முடியவில்லை என தேனி மாவட்டவிவசாயத்துறை தெரிவித்துள்ளது. தேனி மாவட்டத்தில் கடந்த 2009ம் ஆண்டு 7000ம் எக்டேர் செம்மை நெல் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

ஆனால் விவசாய தொழிலாளர்கள் பற்றாக்குறை காரணமாகவும், செம்மை நெல் சாகுபடி பற்றி விவசாயிகளுக்கு போதிய விழிப்புணர்வு இல்லாததால், இலக்கினை எட்ட முடியவில்லை. 6818 எக்டேரில் மட்டுமே சாகுபடி செய்யப்பட்டது. நடப்பு ஆண்டு விவசாயிகள் மத்தியில் செம்மை நெல் சாகுபடி தொடர்பாக விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.

தவிர ஒருங்கிணைந்த தானிய அபிவிருத்தி திட் டம், தேசிய விவசாய வளர்ச்சி திட்டம், நீர்வள நிலவள திட்டம், விதைக்கிராம திட்டம் போன்ற திட்டங்கள் மூலம் செம்மை நெல் சாகுபடி பரப்பினை 8 ஆயிரம் எக்டேராக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என விவசாயத்துறை தெரிவித்துள்ளது.

குறிச்சொற்கள்:

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment