இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

ஈரோடு மாவட்ட தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளில் டி.ஏ.பி., மற்றும் யூரியா உரத்துக்கு திடீர் தட்டுப்பாடு

ஈரோடு மாவட்ட தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளில் டி.ஏ.பி., மற்றும் யூரியா உரத்துக்கு திடீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் காலிங்கராயன் பாசனம் மூலம் 5,083 ஹெக்டேர், தடப்பள்ளி அரக்கன்கோட்டை பாசனத்தில் 9,800 ஹெக்டேர், மேட்டூர் வலதுகரை மற்றும் அம்மாபேட்டை பாசனமாக 7,112 ஹெக்டேர், கீழ்பவானி பாசனம் முதல் போகத்தில் 42 ஆயிரத்து 355 ஹெக்டேர், இரண்டாம் போகத்தில் 41 ஆயிரத்து 150 ஹெக்டேர், குண்டேரிப்பள்ளம் அணை மூலம் 1,001 ஹெக்டேர், வரட்டுப்பள்ளம் அணை மூலம் 1,183 ஹெக்டேர் நிலங்கள் பாசனம் பெறுகின்றன.


ஜூலை 11ல் காலிங்கராயனிலும், ஆகஸ்ட் 15ல் கீழ்பவானி வாய்க்காலிலும் பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டது. மாவட்டத்தின் அனைத்து பகுதியிலும் தீவிரமாக விவசாயப் பணிகள் நடக்கிறது. சில ஆண்டுகளாக மஞ்சளுக்கு நல்ல விலை கிடைப்பதால், மாவட்ட விவசாயிகள் நடப்பு பாசனத்தில் அதிகளவில் மஞ்சள் சாகுபடி செய்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள பாசன சபைகள் மூலம் நடப்பாண்டில் 9,349 ஹெக்டேர் பரப்பளவில் மஞ்சள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.


கிராம மக்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்க, தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியது. இதனால், கிராமங்களில் வசிக்கும் பெரும்பாலானோர், வேலை உறுதி திட்டத்தில் சேர்ந்து பணியாற்ற விரும்புகின்றனர். இதனால், விவசாயத் தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டு, கூலி கடுமையாக உயர்ந்துள்ளது. இப்பிரச்னை ஒருபக்கம் இருக்க, கூட்டுறவு சங்கங்கள் மூலம் கிடைக்கும் உரத்துக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.


தமிழக விவசாயிகள் சங்க மாவட்டத்தலைவர் பெரியசாமி கூறியதாவது:மாவட்டம் முழுவதும் உள்ள கூட்டுறவு வங்கிகள் மூலம் உரங்கள் விநியோகிக்கப்படுகின்றன. ஆகஸ்ட் 16ல் ஈரோடு மாவட்ட பாசனத்துக்காக 60 டன் உரங்கள் ரயில் மூலம் ஈரோடு வந்ததாகத் தெரிகிறது. இன்றைய தேதியில் மாவட்டத்தின் எந்த கூட்டுறவு வங்கியிலும் டி.ஏ.பி., மற்றும் யூரியா உரம் ஒரு மூட்டை கூட இல்லை.அனைத்து சாகுபடிக்கும் உரம் இன்றியமையாதது. கூட்டுறவு வங்கியில் உரம் இல்லாத நிலையில், விவசாயிகள் தனியார் வியாபாரிகளிடம் கொள்முதல் செய்ய வேண்டியுள்ளது. மூட்டைக்கு 50 முதல் 100 ரூபாய் வரை அதிக விலை கொடுக்க வேண்டியுள்ளது.


கீழ்பவானி பாசனப் பகுதியில் தற்போது முதல் போகத்தில் 1.58 லட்சம் ஏக்கர் நிலம் பாசனம் பெறுகிறது. யூரியா, டி.ஏ.பி., உரத்தட்டுப்பாட்டால் விவசாயிகள் பெரும் அதிருப்திக்குள்ளாகி உள்ளனர். மஞ்சள் சாகுபடிக்கு அடியுரம் முக்கியமானது. மொடக்குறிச்சி, நசியனூர், சித்தார், கோபி பகுதியில் உள்ள கூட்டுறவு வங்கியில் ஒரு மூட்டை கூட இருப்பு இல்லை.கூட்டுறவு வங்கியில் பயிர்க்கடன் வழங்குவது இல்லை. நகையை அடமானமாக வைத்துதான் பயிர்க்கடன் பெற வேண்டியுள்ளது. விவசாயிகளுக்கு உரம் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

குறிச்சொற்கள்:

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment