இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

பனை கருப்பட்டி விலை ரூ. 1.10 உயர்வு


கோபிசெட்டிபாளையம்:தென்னை கருப்பட்டிக்கு தொடர்ந்து விலை குறைந்து வரும் நிலையில், பனை கருப்பட்டி விலை கிலோவுக்கு ஒரு ரூபாய் 10 பைசா வரை அதிகரித்துள்ளது.திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் கூட்டுறவு சங்கத்தில் தென்னை மற்றும் பனை கருப்பட்டி ஏலம் நடந்து வருகிறது.கோபி, குன்னத்தூர், பெருந்துறை, சிறுவலூர், கொளப்பலூர், கெட்டிசேவியூர், பங்களாப்புதூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தென்னை மற்றும் பனை கருப்பட்டியை விவசாயிகள் ஏலத்துக்கு கொண்டு வருகின்றனர்.பனை கருப்பட்டிக்கு தற்போது சீஸன் இல்லாததால் குறைந்தளவே விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.கோடைகாலம் முடிந்து விட்டதால் இளநீருக்கு தேவை குறைந்துள்ளது. விவசாயிகள் இளநீர் மற்றும் தேங்காய்க்கு பதிலாக தென்னை கருப்பட்டி உற்பத்தியில் ஈடுபட துவங்கினர்.தென்னை கருப்பட்டி உற்பத்தி அதிகரித்துள்ளதால், விலையும் இறங்குமுகமாக உள்ளது.


குன்னத்தூர் கூட்டுறவு சங்கத்துக்கு நடப்பு வாரம் 13 ஆயிரம் கிலோ தென்னை கருப்பட்டி ஏலத்துக்கு வந்தது. கிலோ ஒன்றுக்கு 39.10 ரூபாய் வரை விவசாயிகளுக்கு கிடைத்தது. கடந்த வாரத்தை விட 1,000 கிலோ தென்னை கருப்பட்டி வரத்து அதிகரித்த போதிலும், 10 பைசா விலை குறைந்திருந்தது. ஐந்து லட்சத்து 8,000 ரூபாய் மதிப்பில் தென்னை கருப்பட்டி வர்த்தகம் நடந்தது.பனை கருப்பட்டி 1,000 கிலோ மட்டும் ஏலத்துக்கு வந்தது. கிலோ ஒன்றுக்கு 57.10 ரூபாய் வரை விற்றது. கடந்த வாரத்தை விட ஒரு ரூபாய் 10 பைசா வரை விலை அதிகரித்திருந்தது. 51 ஆயிரத்து 200 ரூபாய் மதிப்பில் பனை கருப்பட்டி வர்த்தகம் நடந்தது. நடப்பு வாரத்தில் தென்னை மற்றும் பனை கருப்பட்டிகள் ஐந்து லட்சத்து 58 ஆயிரம் ரூபாய் மதிப்பில் வர்த்தகம் நடந்தது.

குறிச்சொற்கள்: , ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment