இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

சுழற்சி முறையில் நாட்டுக்கோழி வளர்க்கும் திட்டம் அறிமுகம்

சுழற்சி முறையில் நாட்டுக்கோழி வளர்க்கும் திட்டம், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.'நாட்டுக்கோழிகளை வீடுகளில் வளர்த்து, சிறந்த லாபம் பெறுவது எப்படி' என்பது குறித்த இலவச பயிற்சி முகாம், கால்நடை மருத்துவம் மற்றும் ஆராய்ச்சி பல்கலையில் நடந்தது.இப்பல்கலை தலைவர் செல்வராஜ் பேசியதாவது:பல்லடம், பொங்கலூர், கொடுவாய் உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் ஐந்தாண்டுக்கு முன் வரை விவசாயத்தில் ஈடுபட்டவர்கள் கூட, தற்போது கோழி வளர்ப்பில் அக்கறை காட்டி வருகின்றனர். பண்ணை கோழிகள், இறைச்சிக்காக மட்டுமே அதிக அளவில் வளர்க்கப்படுகின்றன. சில வகை கோழிகள், முட்டைக்காகவும் வளர்க்கப்படுகின்றன.

நாட்டுக்கோழிகள், இறைச்சி, முட்டை, குஞ்சு பொரிப்பதற்காக வளர்க்கப்படுகின்றன. இவை, ஆண்டுக்கு குறைந்தது எட்டு முதல் 10 முறை அடை காக்கின்றன. ஒரு அடைக்கு ஐந்து முதல் ஆறு முட்டைகள் இடும். ஆண்டுக்கு 50 முட்டைகள் இட்டால், 45 குஞ்சுகள் கிடைக்கும். அதில் 10 குஞ்சுகளாவது பெட்டையாக இருந்தால், அது போடும் முட்டைகளில் இருந்தும் லாபம் கிடைக்கும். மாதம் 2,250 முதல் 3,000 ரூபாய் வரை வருவாய் ஈட்டக்கூடிய, சிறந்த தொழில், நாட்டுக்கோழி வளர்ப்பு.இதன் காரணமாக, ஏழ்மையானவர்களை பொருளாதார ரீதியாக முன்னேற்ற வேண்டும் என்பதற்காக, சுழற்சி முறையில் நாட்டுக்கோழி வளர்ப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில், கிராமப்புற பகுதிகளை தேர்ந்தெடுத்து நாட்டுக்கோழி வளர்ப்பில் ஆர்வம் உள்ளவர்களிடம் விளக்கப்படும்.அவர்களிடம் நான்கு பெட்டை கோழிகள், ஒரு சேவல் கொடுக்கப்படும். நன்கு வளர்ந்த பெட்டை கோழிகள் மூலம் கிடைக்கும் நான்கு பெட்டை மற்றும் ஒரு சேவலை மீண்டும் கால்நடைத்துறையிடம் ஒப்படைக்க வேண் டும். அவற்றுக்கான 'செட்' அமைத்து பராமரித்துக்கொள்வது மட்டுமே பயனாளிகளுக்குரிய சிறிய செலவு.இவ்வாறு, செல்வராஜ் பேசினார்.முகாமில், திருப்பூர் கால்நடை மருத்துவ பல்கலை கழக இணை பேராசிரியர் மதிவாணன், உதவி ஆசிரியர் கார்த்திகேயன் மற்றும் பல்லடம், ஊத்துக்குளி, பொங்கலூர், முத்தணம்பாளையம், காங்கயம் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் பங்கேற்றனர்.

குறிச்சொற்கள்: , , ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment