இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

நெல் கொள்முதல் செய்பவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் கிடுக்கிப்பிடி

நெல் கொள்முதல் செய்யும் தனியார், நிறுவனங்கள், நிறுமங்களுக்கு மத்திய மாநில அரசுகளின் உணவுப்பொருள் துறை கடும் கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. உணவுப் பொருள் தட்டுப்பாடு: இந்தியாவில் கரீப் பருவ அறுவடை செப். மாதத்தில் நடந்து முடிந்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் போதுமான மழை இல்லாததாலும், பருவ கால மாற்றங்களாலும், மற்ற மாநிலங்களான ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் வெள்ள பெருக்கு காரணமாகவும் வட மாநிலங்களில் நெல் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இது தவிர பயிறு, பருப்பு உற்பத்தியும் இந்திய அளவில் போதுமான அளவில் இல்லாததால் உணவுப்பொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அரிசி, பருப்பு, பயறு விலைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி: உணவுப்பொருள் உற்பத்தி கனிசமாக குறைந்து வருவதால் உள் நாட்டில் தட்டுப்பாடு ஏற்பட்டு விலை உயர்வு காரணமாக சாதாரண மக்கள் பாதிக்கப்படுகின்றனர். இதனை தவிர்க்க பர்மா, சீன நாடுகளில் இருந்துபருப்பு, சர்க்கரை, பாமாயில் இறக்குமதி செய்யப்படுகிறது. குறைந்த விலையில் உணவுப்பொருள்கள் ரேஷனில் சாதாரண மக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.


புதிய கட்டுப்பாடு: அரிசி, நெல் ஆகிய இரண்டையும் கொள்முதல் செய்யும் தனியார், நிறுவனங்கள், நிறுமங்கள் இந்தியாவின் எந்த பகுதியில் இருந்தும் மொத்த அளவு இதற்கு 10 ஆயிரம் மெட்ரிக் டன்னுக்கு மேல் மேல் இருந்தால் அது குறித்து விபர அறிக்கையினை வழங்க வேண்டும். அரசு முதன்மை செயலாளர், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை, சென்னைக்கு, குறித்த கால அவகாசத்திற்குள் விபரம் தெரிவிக்க வேண்டும்.
25 ஆயிரம் மெட்டரிக் டன்னுக்கு மேல் கொள்முதல் செய்தால் விபர அறிக்கையினை உரிய படிவத்தில் நிரப்பி குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் அரசு சார்பு செயலாளர், உணவு மற்றும் பொது வினியோகத் திட்டத்துறை, கிரிஷி பவன், புது டெல்லி என்ற முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும். uspy34.fpd@nic.in என்ற இணையதளத்திலும் தெரிவிக்கலாம்.


மாநில அரசுகள் விபரப்பட்டியல்: மாதந்தோறும் தனியார், நிறுவனம், நிறுமம் ஆகியோரிடம் நெல், அரிசி கொள்முதல் குறித்து சேகரிக்கப்படும் தகவல்களை மாநில அரசு தொகுத்து மாதந்தோறும் மத்திய அரசின் சார்பு செயலாளர், உணவு பொது வினியோகத்திட்டத்துறைக்கு குறிப்பிட்ட காலத்திற்குள் அனுப்ப வேண்டும்.
இணைய தள முகவரி: இதற்கான படிவங்கள் மத்திய உணவுத்துறையின் இணையதளமான www.fcamin.nic.in இணையதளத்தில், மாநில உணவு வழங்கல் துறை www.cosumer.tn.gov.in என்ற இணையதளத்தில் உள்ளது. தனியார், நிறுவனங்கள், நிறுமங்கள் இதனை கடைபிடிக்க வேண்டுமமென உணவு பொருள்கள் வழங்கல் துறை தெரிவித்துள்ளது. இதனை அனைத்து கலெக்டர்களும் தனியார், மற்றும் நெல், அரிசி கொள்முதல் செய்பவர்களுக்கு அறிவுறுத்தும் படி தெரிவித்துள்ளது. மத்திய, மாநில அரசுகளின் கிடுக்கிப்பிடியால் நெல், அரிசி கொள்முதல் செய்து இருப்பு வைப்பவர்கள் கிலியில் உள்ளனர்.

குறிச்சொற்கள்: , ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment