இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

விவசாயத்தை மேம்படுத்த தொழிற்நுட்ப பூங்கா : வேளாண் ஆராய்ச்சி கழக அதிகாரி உறுதி

""விவசாயத்தை மேம்படுத்த, நீலகிரியில் தொழிற்நுட்ப பூங்கா அமைக்கப்படும்,'' என இந்திய வேளாண் ஆராய்ச்சி கழக அதிகாரி தெரிவித்தார். குன்னூர் உபாசி வேளாண் அறிவியல் நிலையம், தேயிலை வாரியம் சார்பில், குன்னூரில் நேற்று துவக்கப்பட்ட நீலகிரி விவசாயிகள் திருவிழாவில், இந்திய வேளாண் ஆராய்ச்சி கழக மண்டல திட்ட இயக்குனர் டாக்டர் பிரபுகுமார் பேசியதாவது: இந்தியாவில், 572 மாவட்டங்களில் உள்ள வேளாண் அறிவியல் நிலையங்களில், விவசாயிகள் பயன்பெறும் வகையில் தகவல் மையம் அமைக்க திட்டமிடப்பட்டு, முதற் கட்டமாக 200 மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ளது.குன்னூர் உபாசி வேளாண் அறிவியல் நிலையத்தில் 25 லட்சம் மதிப்பில் தகவல் மையம் அமைக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் தாங்கள் மேற்கொள்ளும் விவசாயம் குறித்த சந்தேகங்களுக்கு உரிய விளக்கம், சாகுபடி முறைகளை, தகவல் மையம் மூலம் பெற்றுக் கொள்ளலாம். தற்போது, விவசாயிகளுக்கு கிடைக்கும் இடுபொருள் தரமானதாக இருப்பதில்லை; தரமான இடுபொருள் கிடைக்க வேளாண் அறிவியல் நிலையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளே இடுபொருட்களை தயாரித்து பயன்படுத்துவதற்கு உரிய பயிற்சியை வழங்க வேண்டும். ஏற்கனவே, வழங்கி வரும் தொழிற்நுட்ப சேவையை மேலும் மேம்படுத்த வேண்டும். விவசாயம் சார்ந்த அனைத்து தொழிற்நுட்பங்கள், தகவல்களை ஒரே இடத்தில் பெற்றுக் கொள்ளும் வகையில், மாவட்டந்தோறும் தொழிற்நுட்ப பூங்கா அமைக்க திட்டமிட்டுள்ளோம்; குன்னூர் உபாசி வேளாண் அறிவியல் நிலையத்தில் அமைக்க திட்டமிட்டுள்ளோம்.
அதற்கான ஆயத்தப் பணிகளை உபாசி வேளாண்மை அறிவியல் நிலையம் மேற்கொள்ள வேண்டும். தட்ப வெப்ப நிலை, நீர், நிலம், தொழிலாளர் பற்றாக்குறைக்கு ஏற்ப தொழிற்நுட்பங்களை ஏற்படுத்த வேண்டியது அவசியமாகியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் நீர் பற்றாக்குறை உள்ளது; இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் சார்பில், தேக்கி வைக்கப்பட்ட நீரை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது குறித்த தொழிற்நுட்பத்தை கற்றுக் கொடுக்கும் பயிற்சி மையத்தை, 10 லட்சம் மதிப்பில் குன்னூரில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு, டாக்டர் பிரபுகுமார் பேசினார்.

குறிச்சொற்கள்: , , ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment