இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

பாதாளத்தில் அமராவதி அணை நீர்மட்டம் பாசனப்பகுதியில் வறட்சி அபாயம்



உடுமலை: அமராவதி அணை நீர் மட்டம் அதல பாதாளத்திற்கு சென்றுள்ளதால், பாசன பகுதிகளில் வறட்சி மற்றும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது. உடுமலை அருகேயுள்ள அமராவதி அணை மூலம், 54 ஆயிரத்து 647 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு, 2009 ஜூன் முதல் 2010 மார்ச் வரை தண்ணீர் வழங்கப்பட வேண்டும். புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு 2009 ஆக.,முதல் 2010 ஜன., வரை தண்ணீர் வழங்கப்பட்டு, பிப்.,ல் பத்து நாள் உயிர் தண்ணீரும் வழங்கப்பட்டது.
இந்த ஆண்டு, தென்மேற்கு பருவ மழை போதிய அளவு பெய்ய வில்லை. வட கிழக்கு பருவ மழை முன்னதாகவே வங்கி, முன்னதாகவே முடிந்தது. வடகிழக்கு பருவ மழையால், டிச., 26ல், ஒரு முறை மட்டும் அணை நிரம்பியது,
பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு தொடர்ந்து தண்ணீர் வழங்கப்பட்டு வரும் நிலையில், மூன்று மாதங்களாக அணைக்கு நீர் வரத்து இல்லாததால், அணை நீர் மட்டம் வேகமாக சரிந்தது. நீர் இருப்பு பற்றாக்குறையால், தாராபுரம் தாலுகா மற்றும் கரூர் மாவட்ட பாசனத்திற்கு தண்ணீர் வழங்குவது நிறுத்தப்பட்டது. உடுமலை தாலுகா பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு, மார்ச் 31க்குள், இறுதி சுற்று தண்ணீர் வழங்க வேண்டியதுள்ளது.


நேற்று காலை நிலவரப்படி, அணை நீர் மட்டம், மொத்தமுள்ள 90 அடியில், 31.07 அடியாகவும், 4 ஆயிரத்து 47 மில்லியன் கன அடிகொள்ளளவில், 48.27 மில்லியன் கன அடி நீர் மட்டுமே இருப்பு உள்ளது. இதில், பயன்படுத்த முடியும் நீரின் அளவு 16.07 அடியாக உள்ளது. அமராவதி அணை நீர் மட்டம் "டெட் ஸ்டோரேஜ்' நிலைக்கு சென்றுள்ளதால், உடுமலை தாலுகா பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு ஒரு சில நாட்கள் கூட தண்ணீர் வழங்க முடியாத நிலை உள்ளது. பாசன பகுதிகளில் நிலைப்பயிராக உள்ள நெல் பயிர்களுக்கு தொடர்ந்து தண்ணீர் கிடைக்காமல், கருகும் அபாயம் உள்ளது. அணையிலுள்ள மீன் , முதலை போன்ற உயிரினங்களும் வறட்சியால் பாதிக்கும் அபாயம் உள்ளது.

குறிச்சொற்கள்: , , ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment