வறட்சியை சமாளிக்க வெங்காய பயிருக்கு சொட்டு நீர் பாசனம் அமைத்த விவசாயி
7:19 AM சிறப்பு, செய்திகள், தலைப்பு, வறட்சியை சமாளிக்க வெங்காய பயிருக்கு சொட்டு நீர் பாசனம் அமைத்த விவசாயி 0 கருத்துரைகள் Admin
வறட்சியை சமாளிக்க ஒட்டன்சத்திரம் விவசாயிகள் வெங்காயப் பயிருக்கு சொட்டு நீர் பாசனம் அமைத்துள்ளார்.
ஒட்டன்சத்திரம் அருகிலுள்ள காவேரியம்மாபட்டியைச் சேர்ந்த விவசாயி சிவகிரி பழனிச்சாமி. இவர் அரசு மானியத்துடன் வெங்காயம், காலிபிளவர் உள்ளிட்ட பயிர்களுக்கு சொட்டு நீர் பாசனம் அமைத்துள்ளார். விவசாய கூலி தொழிலாளர்கள் தட்டுப்பாடு உள்ள இந்த நேரத்தில் சொட்டு நீர் பாசனம் அமைப்பதின் மூலம் குறைந்த எண்ணிக்கையிலான விவசாய தொழிலாளர்கள் இருந்தால் போதும் என்கிறார்.
விவசாயி பழனிச்சாமி கூறியதாவது: நீர் பற்றாக்குறை காணப்படும் இந்த நாட்களில் வறட்சியை சமாளிப்பதற்காக சொட்டு நீர் பாசனம் அமைத்துள்ளேன். இதனால் களைகள் வருவதில்லை. பாத்திகள் அமைத்து நீர் பாய்ச்சும் போது அந்த இடங்களில் வெங்காயம் நட முடியாது. ஆனால் சொட்டு நீர் பாசன முறையில் பாத்திகளுக்கு அவசியம் இல்லை. ஆதலால் அந்த இடங்களிலும் சேர்த்து வெங்காயம் நடப் படுவதால் மகசூல் அதிகம் கிடைக்கிறது.
அனைத்து பயிர்களுக்கும் தேவையான அளவிற்கு சீராக நீர் பாய்ச்சப்படுவதால் மகசூல் அதிகம் கிடைக்கிறது. உர டேங்கிலிருந்து பயிர்களுக்கு உரங்கள் செல்வதால் அனைத்து பயிர்களுக்கும் சரி சம அளவில் உரச் சத்து கிடைக்க வாய்ப்பு உள்ளது. இதனால் பயிர்கள் நன்றாக வளர்கிறது. கிணறுகளில் நீர்மட்டம் இறங்குமுகமாக உள்ள நிலையில் சொட்டு நீர் பாசனம் அமைப்பதின் மூலம் அனைத்து பயிர்களும் காய் வதிலிருந்து காப்பாற்றி நல்ல விளைச்சல் பெற்று விடலாம் என்றார்.
இது குறித்து வேளாண் அதிகாரி ஒருவர் கூறுகையில், சொட்டுநீர் பாசனம் அமைப்பதற்கு அரசு 65 சதம் மானியத் தொகை வழங்குவதாகவும், வறட்சியை சமாளிக்க அனைத்து பயிர்களுக்கும் சொட்டுநீர் பாசனம் சிறந்தது என்றும் தெரிவித்தார்
குறிச்சொற்கள்: சிறப்பு, செய்திகள், தலைப்பு, வறட்சியை சமாளிக்க வெங்காய பயிருக்கு சொட்டு நீர் பாசனம் அமைத்த விவசாயி
பகிர்தல் மிக எளிமையானது,அழகானது