இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

பருவநிலை மாற்றத்தால் மல்லிகை சாகுபடி பாதிப்பு: விவசாயிகள் கவலை

பனிப்பொழிவு உள்ளிட்ட பருவநிலை மாற்றத்தால் மல்லிகை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளதால்,கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் சுற்றியுள்ள விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.

வேலாயுதம்பாளையம் சுற்றியுள்ள சேமங்கி, மரவாபாளையம், புங்கோடை, வேட்டமங்கலம் பகுதியில் 50 ஏக்கருக்கு மேல் பரப்பளவில் மல்லிகைப்பூ சாகுபடி செய்யப்படுகிறது. இப்குதியில் ஊசி மல்லிகை, குண்டு மல்லி, அடுக்கு மல்லி ரகங்கள் அதிக அளவில் வளர்க்கப்படுகிறது. செடிகளை வரிசையாக பாத்தி கட்டி உரம் வைத்து பூச்சிகொல்லி மருந்து தெளித்து பாதுகாத்து வளர்க்கப்படுகிறது.எப்போதும் கார்த்திகை மாதம் கடைசி வாரம் முதல் மார்கழி, தை கடைசி வாரம் வரையில் பூத்து குலுங்குகிறது. இங்கு களிமண் கலந்து வண்டல் சேற்று மணல் உள்ளதால், குறைந்த அளவு தண்ணீர் பாய்ச்சினால் கூட மல்லிகை செடியின் அடிவேர் காய்ந்துபோகாதவகையில் ஈப்பதம் நீண்ட நேரம் நீடிப்பதால், மல்லிகை செடி மற்றும் பூ வளர்ச்சி சிறப்பாக ருக்கிறது. நன்கு வளர்ந்த ஒரு செடியில் சுமார் 100 கிராம் முதல் 250 கிராம் வரை தினசரி பூ பறிக்கலாம். இவ்வாறு ஒரு ஏக்கருக்கு குறைந்த பட்சம் ஐந்து கிலோ பூவாவது தினசரி பறிக்கும் வாய்ப்பு உள்ளது. தற்போது சீசன் முடிந்த காரணத்தினால் பூ மொட்டு வருவதே குறைந்துவிட்டது. மேலும், வரும் மொட்டும் சிறுத்துபோகிறது.தற்போது சீசன் முடிந்தாலும், தை முதல் முகூர்த்த காலம் துவங்குவதால், மாசி மாதம் வரை பூ தேவை அதிகரிக்கிறது. இந்த காலகட்டத்தில் ஒரு கிலோ மல்லிகை பூ 500 ரூபாய் வரை விலை வைக்கப்படுகிறது. தற்போது பருவ நிலை மாற்றம் காரணமாக வெளிமாவட்டங்களில் இருந்து வியாபாரிகள், இப்பகுதிக்கு வருவதால், மல்லிகையின் விலை ஒரு கிலோ ஆயிரம் ரூபாய்க்கு மேல் எகிறி செல்கிறது. இந்நிலையில், ஏக்கருக்கு ஐந்து முதல் 10 கிலோ வரை பூக்கும் மல்லிகை பூவானது, தற்போது அரை கிலோதான் கிடைக்கிறது. கடந்த இரண்டு மாதமாக தொடரும் கடும் பனிப்பொழிவு காரணமாக, மல்லிகை மொட்டு அரும்புவது பாதிக்கப்பட்டுள்ளது.

குறிச்சொற்கள்: ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment