இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

வேலி பயிராக காட்டாமணக்கு : விவசாயிகள் ஆர்வம்

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பகுதியில் தானிய வேலி பயிராக காட்டாமணக்கு பயிரிடுவது அதிகரித்துள்ளதால், பயிர்களும் பாதுகாப்பாக இருப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். முதுகுளத்தூர் பகுதியில் கோடை காலங்களில் விவசாயம் அத்தி பூத்தாற்போல் தான் இருக்கும். ஒரு சில பகுதிகளில் மட்டும் மிளகாய், பருத்தி பயிரிடப்பட்டு, இதை பாதுகாக்க விவசாயிகள் படாத பாடுபட்டு கொண்டுள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக தானிய வேலி பயிராக சோளம், கம்பு, கேழ்வரகும், கோடை காலத்தில் காட்டாமணக்கும் பயிரிட்டு பயிர்களை பாதுகாத்தும் விவசாயிகள் சம்பாதித்து வருகின்றனர். காட்டாமணக்கு மழை இல்லாவிடிலும், விவசாயிகளுக்கு லாபத்தை ஈட்டி வருவதால், தற்போது, தானிய ஊடுபயிராக காட்டாமணக்கு பயிரிடுவது அதிகரித்துள்ளது. காட்டாமணக்கு மூன்று ஆண்டுகளுக்கு பலனை தந்து, லாபம் ஈட்டுகிறது. கோடை கால பயிர்களான காட்டாமணக்கு விவசாயம்த்தை மேம்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குறிச்சொற்கள்: ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment