இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

நெல் விவசாயிகளை பாதுகாத்திட மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை



நெல் வியாபாரிகளிடமிருந்து விவசாயிகளை பாதுகாத்திட மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப் பட்டுள்ளது. இதுகுறித்து கடலூர் மாவட்டம் புவனகிரி விவசாய சங்க தலைவர் குமார், முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு: மாவட்டத்தில் தொடர் மழையால் தண்ணீரில் மூழ்கியும், புகையான் தாக்கியும் நெல் சாகுபடி பெரிதும் பாதித்து விவசாயிகள் இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர். நெல் அறுவடை நேரத்தில் நெல் வியாபாரிகள், புரோக் கர்கள், அரிசி ஆலை உரிமையாளர்கள் ஒன்று கூடி நெல்லை குறைவான விலைக்கு வாங்க முடிவு செய்துள்ளனர். கடந்த ஆண்டு ஒரு கிலோ நெல்லுக்கு அரசு 10 ரூபாய் நிர்ணயம் செய்தது. அப்பொழுது வியாபாரிகள் கிலோ நெல்லை 15 ரூபாய்க்கு வாங்கினர். ஆனால் தற்போது அரசு 11 ரூபாய் விலை நிர்ணயித்துள்ள நிலையில், வியாபாரிகள் 12.50 ரூபாயிற்கு வாங்க முடிவு செய்துள்ளனர். வெளிச் சந்தையில் அரிசி கிலோ 30 ரூபாயிலிருந்து 45 ரூபாய்வரை விற்கிறது. இந்நிலையில் வியாபாரிகள் விலையை குறைத்து வருவது வேதனையளிக்கிறது. விவசாயிகள் பாதிப்பு என்பது நாட்டின் பாதிப்பாகும். ஆகவே, நெல் வியாபாரிகளிடமிருந்து விவசாயிகளை பாதுகாத்திட மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

குறிச்சொற்கள்: , ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment