இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

மரவள்ளி கிழங்குக்கு கூடுதல் விலை: விவசாயிகள் மகிழ்ச்சி

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா பகுதியில், மரவள்ளி கிழங்கு விவசாயம் அதிகரித்துள்ள நிலையில், விலையும் கூடுதலாக கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்சியடைந்துள்ளனர். வேடசந்தூர் பகுதியில், கடந்த சில ஆண்டுகளாக, சூரியகாந்தி விவசாயத்தில் ஈடுபட்டு வந்த விவசாயிகள் தற்போது மரவள்ளி கிழங்கு விவசாயத்திற்கு மாறியுள்ளனர். குறைந்த செலவில் கூடுதல் மகசூலும், நல்ல விலைக்கு விற்பதால் ஏராளமான விசாயிகள் இந்த விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர். கிழங்கு சீசன் துவங்கியுள்ளது. ஒரு டன் கிழங்கு 7 ஆயிரத்து 500 ரூபாய் முதல் 8 ஆயிரம் ரூபாய் வரை விற்கப்படுகிறது. ஒரு ஏக்கருக்கு 10 முதல்15 டன் வரை மகசூல் கிடைக்கிறது. வியாபாரிகளே நேரடியாக தோட்டத்திற்கு வந்து, கிழங்குகளை வெட்டி எடை போட்டு எடுத்து செல்கின்றனர். இதனால் விவசாயிகளுக்கு வேலையும், அலைச்சலும் மிச்சமாகுகிறது. வேடசந்தூர், அழகாபுரி, கூம்பூர், எரியோடு, கோவிலூர் ஆகிய இடங்களில் பல ஏக்கர் பரப்பளவில் மரவள்ளி கிழங்கு பயிரிடப்பட்டுள்ளது. குச்சிக்கிழங்கு, கப்பை கிழங்கு என பல பெயர்களில் அழைக் கப்படுகிறது. இந்தவிவசாயத்தில் கூடுதல் மகசூலும், விலையும் கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

குறிச்சொற்கள்: ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment