இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

தென்னை மரத்தில் மர்ம நோய் உடுமலை அருகே தீவிரம் : காய்ப்பு திறன் குறைகிறது

தென்னை மரங்களில் மர்ம நோய் வேகமாக பரவி வருவதால் காய்ப்பு திறன் பாதிக்கிறது. இதை பார்த்து விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். உடுமலை அருகேயுள்ள ராமச்சந்திரா புரம், அனிக்கடவு மற்றும் சுற்றுப்பகுதி களில் ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமாக தென்னை பயிரிடப்பட்டுள்ளது. சில வாரங்களுக்கு முன் கொங்கல்நகரம் ரோட் டில் வரிசையாக உள்ள தோட்டங்களிலுள்ள தென்னை மரங்களின் ஓலை நுனிப் பகுதியில் கரும்புள்ளிகள் தோன்றியது. சில நாட்களில் ஒலைகளில் பச்சையம் குறைந்து கருக துவங்கியது. இந்த நோய் தாக்கிய ஒலைகள் அனைத்தும் தீ வைத்து எரித்தது போல் பழுப்பு நிறமாக மாறியது. நோய் தாக்குதல் வேகமாக அருகிலுள்ள தோட்டங்களுக்கும் பரவியது. இதனால், நூற்றுக்கணக்கான மரங்கள் பாதிக்கப்பட்டதால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்தனர். விவசாயிகள் கூறியதாவது: மர்ம நோய் தாக்குதலால் முற்றிலுமாக காய்கள் பிடிப்பது குறைந்து விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. கோடை காலத்தில் மரங்கள் நோயினால் பாதிக்கப்பட்டால் இயல்பான காய்ப்பு திறன் வர ஓராண்டிற்கு மேலாகும். எனவே, வேளாண்துறை அதிகாரிகள் விஞ்ஞானிகள் குழுவின் மூலம் உடனடியாக ஆய்வு நடத்த வேண்டும் என்றனர். வேளாண்துறை அதிகாரிகள் கூறியதாவது:
தட்பவெப்ப நிலை மாற்றம் காரணமாக இலைகருகல் நோய் பரவியுள்ளது. நோய்த்தடுப்பு பணிகளை விவசாயிகள் ஒருங்கிணைந்து மேற்கொண்டால் விரைவில் கட்டுப்படுத்தலாம். நோய்த்தாக்குதலை கட்டுப்படுத்த உயர் அழுத்த தெளிப்பான் மூலம் ஒரு சதவீத போர்ட்டோ கலவையை மரங்களுக்கு தெளிக்கலாம். அல்லது, கான் டாப் மருந்தை மரத்திற்கு 3 மில்லி முதல் 5 மில்லி வரை 10 மில்லி தண்ணீரில் கலந்து வேர் மூலம் அளிக்கலாம்.
இலை கருகல் நோய் குறித்த சந்தேகங்களுக்கு விவசாயிகள் பெதப்பம்பட்டி வேளாண்மை விரிவாக்க மையத்தை அணுகலாம்', இவ்வாறு தெரிவித்தனர்.

குறிச்சொற்கள்:

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment