வெளியிடங்களுக்கு கரும்பு விற்க விவசாயிகளுக்கு வேளாண் துறை தடை
9:20 AM செய்திகள், வெளியிடங்களுக்கு கரும்பு விற்க விவசாயிகளுக்கு வேளாண் துறை தடை 0 கருத்துரைகள் Admin
உடுமலை - "அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் அனுமதி இல்லாமல் வெளியிடங்களுக்கு விற்பதோ, வெல்லம் காய்ச்சுவதோ கூடாது' என, வேளாண் துறை தெரிவித்துள்ளது.
வேளாண்மை உதவி இயக்குனர் மற்றும் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை: உடுமலை அருகே உள்ள அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை அரவைக்கு கரும்பு எடுக்கும் எல்லைகளாக, கோவை மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி தாலுகா, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி, ஒட்டன்சத்திரம் தாலுகா, திருப்பூர் மாவட்டத்தில், திருப்பூர் , உடுமலை , தாராபுரம் தாலுகாவிலுள்ள மூலனூர், கன்னிவாடி பிர்க்காக்கள் தவிர மற்ற பகுதிகள், காங்கயம், காடையூர் பகுதிகள் கட்டுப்பாட்டு பகுதிகள். இப்பகுதியில் ஒப்பந்தமிட்ட, ஒப்பந்தமிடாத கரும்புகளை வாங்குவது; ஆலை எல்லைக்கு வெளியிலோ வெல் லம் காய்ச்சுவது, கரும்பு கட்டுப்பாட்டு சட்டப்படி குற்றம். அனுமதியில்லாமல் கரும்பு கொண்டு செல்வதை தடைசெய்து சர்க்கரை துறை ஆணையரால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அனுமதியில்லாமல் கரும்பு கொண்டு செல்வதை கண்காணிக்கவும், தடுக்கவும், கோவை, திண்டுக்கல், திருப்பூர் கலெக்டர்கள் தலைமையில், ஆர்.டி.ஓ., தாசில்தார், உதவி வேளாண் இயக்குனர் கொண்ட கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையின் கரும்பு விவகார எல்லைகளில், ஆலை அரவைக்கு பதிவு செய்துள்ள விவசாயிகள், தங்களது கரும்பை அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு வழங்க வேண்டும்.
அனுமதியில்லாமல் வேறு உபயோகங்களுக்கு பயன்படுத்துவது சட்டப்படி குற்றம். அமராவதி சர்க்கரை ஆலையில் கரும்பு அரவை மார்ச் மாதம் துவங்க உள்ளது. எனவே, விவசாயிகள் தங்களது கரும்புகளை ஆலை அரவைக்கு வழங்கி ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு, அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
குறிச்சொற்கள்: செய்திகள், வெளியிடங்களுக்கு கரும்பு விற்க விவசாயிகளுக்கு வேளாண் துறை தடை
பகிர்தல் மிக எளிமையானது,அழகானது