இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

இறால் குஞ்சுகளைப் பரிசோதிக்க தரமான ஆய்வுக் கூடங்கள்



நோய் தாக்காத ஆரோக்கியமான இறால் குஞ்சுகளைப் பரிசோதிக்க உதவும் தரமான ஆய்வுக் கூடங்களை இந்திய அரசின் கடல் பொருள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையகம் பரிந்துரை செய்துள்ளது.​ ​ இதுதொடர்பாக ஆணையகத்தின் துணை இயக்குநர் ​(தஞ்சாவூர்)​ சி.ஜெ.​ சம்பத்குமார்,​​ செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:​ ​ 2007-08 ஆம் ஆண்டில் இந்தியாவிலிருந்து 1.36 லட்சம் டன் அளவிற்கு ஏற்றுமதியான இறால்களின் அளவு,​​ கடந்த 2008-09 ஆம் ஆண்டில் 1.26 லட்சம் டன்னாகக் குறைந்துவிட்டது.​ இதற்குப் பல காரணங்கள் இருந்தபோதிலும்,​​ வெண்புள்ளி வைரஸ் நோய்த் தாக்குதல்தான் பிரதானம்.​ இந்த வைரஸ் தாக்கம் காணப்பட்டால்,​​ அதைப் போக்குவதற்கு இதுவரை,​​ உலகில் எந்த மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை.​ ​ வருமுன் தடுப்பது ஒன்றுதான் சரியான வழியாகும்.​ இதற்கு மிகச் சிறந்த பண்ணை மேலாண்மை முறையைப் பின்பற்ற வேண்டும்.​ சரியான விதத்தில் பண்ணையைத் தயார்படுத்துதல்,​​ நீர் மேலாண்மை,​​ பி.சி.ஆர்.​ பரிசோதனை செய்த வளமான இறால் குஞ்சுகளைப் பொறிப்பகத்தில் தேர்வு செய்தல்,​​ சரியான முறையில் தீவனமிடுதல்,​​ குழுவாகச் செயல்படுதல் போன்ற வழிமுறைகளால் இந்த வெள்ளைப்புள்ளி இறால் நோயின் தாக்கத்திலிருந்து இறால்களைக் காக்கலாம்.​ ​ இறால் குஞ்சுகளை பி.சி.ஆர்.​ பரிசோதனை செய்ய 11 ஆய்வுக் கூடங்களை கடல் பொருள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையகம் தேர்வு செய்துள்ளது.​ அவை:​ ​ ராம் அக்வா-கூனிமேடு,​​ சீ.பீ.அக்வாகல்சர்-செட்டிக்குளம்,​​ இண்டஸ் அக்வா-மரக்காணம்,​​ என்.கே.​ மெரைன்-மரக்காணம்,​​ சீ.பீ.​ அக்வாகல்சர்-மரக்காணம்,​​ எம்பையோசிஸ் இந்தியா-மரக்காணம்,​​ வைசாகி பையோ மெரைன்-கைபனிக்குப்பம்,​​ குரோபெஸ்ட் பீட்ஸ்-புதுநடுக்குப்பம்,​​ ஜீனோம்பார்க் ஷ்ரிம்ஸ் ரிசர்ச் டையாகனஸ்டிக் இன்ஸ்டிட்டியூட்-பனையூர்,​​ பாட்லாப் பையோடெக்-நீலாங்கரை,​​ ஆசியன் அனாலிட்டிகல் லபாரேட்டரீஸ்-பாலவாக்கம்.​

குறிச்சொற்கள்: ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment