இயற்கை வேளாண்மை புரிவோர் அங்ககச் சான்றிதழ் பெற வலியுறுத்தல்
12:36 PM
இயற்கை வேளாண்மை புரிவோர் அங்ககச் சான்றிதழ் பெற வலியுறுத்தல்,
செய்திகள்
Admin
இயற்கை வேளாண்மை புரிவோர் கண்டிப்பாக அங்ககச் சானறிதழ் பெற வேண்டும் என கோவை வேளாண் பல்கலைக்கழக அங்ககச் சான்றளிப்பு துறை அலுவலர் பி.ரபியுல்லா கூறினார்.திருவண்ணாமலை மாவட்டக் கூட்டுறவு ஒன்றியம், கிரிப்கோ நிறுவனம் சார்பில் செங்கம் அடுத்த செ.நாச்சிப்பட்டு ஸ்ரீ சக்தி பாலிடெக்னிக்கில் இயற்கை வேளாண்மை கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், ரபியுல்லா பேசியது: விவசாயிகள் அதிகளவில் பூச்சிகொல்லி மருந்துகளை பயன்படுத்தியதால் நிலங்கள் அனைத்து விஷமாகி விட்டன.அதிக மகசூல் கிடைக்கும் என இத்தனை நாள்களாக ரசாயன உரங்களைப் பயன்படுத்தி வந்தோம். இதனால் மண் தனது தன்மையை இழந்து விட்டது. மண் வளமாக இருந்தால்தான் மகசூல் அதிகரிக்கும். கரிமச் சத்து குறைவாக இருப்பதால் நிலங்கள் பாதிப்படைகின்றன. இயற்கை விவசாயம் செய்தால் கூடுதல் மகசூல் கிடைக்கும். நிலத்தின் தன்மையும் பாதுகாகப்படும். மண்புழு உரம், நுண்ணுயிர் இடுபொருள்கள், உரங்கள், பூசணக்கொல்லிகள், மூலிகை பூச்சி விரட்டிகள், இயற்கை எரு, போன்றவற்றை பயன்படுத்த வேண்டும். இயற்கை விவசாயம் செய்வோர் கண்டிப்பாக அங்ககச் சான்றிதழ் பெற வேண்டும். தனிநபராகவோ, கூட்டாகவோ, அல்லது ஒரு நிறுவனமாகவோ பதிவு செய்யலாம். விண்ணப்பப் படிவம், பண்ணையின் பொது விவரம், பண்ணை வரைபடம், மண் மறறும் பாசனநீர் பரிசோதனை விவரம், ஆண்டு பயிர்திட்டம், துறையுடன் ஒப்பந்தம், ஆகியவற்றை மூன்று நகல்களில் அளிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு அங்கக சான்றளிப்பு இயக்குநர், தடாகம் சாலை, ஜிசிடி அஞ்சல், கோவை-13, தொலைபேசி-0422-2435080-ஐ அணுகலாம் என்றார் ரபியுல்லா.மண்டல இணைப்பதிவாளர் ச.சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். கூட்டுறவு ஒன்றிய தனி அலுவலர் ஆறுமுகம் வரவேற்றார்.பாலிடெக்னிக் தாளாளர் எஸ்.வெங்கடாசலபதி, வேளாண் உதவி இயக்குநர்கள் சிவக்குமார், வடமலை, நபார்டு உதவிப் பொது மேலாளர் நாராயணன், விதைச் சான்று அலுவலர் சுப்பிரமணியன், கள அலுவலர் தயாளன் உள்ளிட்டோர் பேசினர்.
குறிச்சொற்கள்:
இயற்கை வேளாண்மை புரிவோர் அங்ககச் சான்றிதழ் பெற வலியுறுத்தல்,
செய்திகள்
பகிர்தல் மிக எளிமையானது,அழகானது
இதனைச் சார்ந்த பதிவுகள்
0
கருத்துரைகள்
-இந்த பதிவிற்கு..
Post a Comment