இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

வாழைநாரில் கைவினைப்பொருள்கள் தயாரிக்க ​ மகளிர் சுய உதவிக் ​குழுவினர் முயற்சிக்க வேண்டும்

வாழை நாரை மூலப்பொருளாகக் கொண்டு கைவினைப் பொருள்களை தயாரிக்க மகளிர் சுயஉதவிக் குழுவினர் முயற்சிக்க வேண்டுமென ஆட்சியர் யோசனை தெரிவித்துள்ளார்.​ ​ கரூர் ஊராட்சி ஒன்றியம் நன்செய்புகழூர் ஊராட்சியில் ஊராட்சிப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழா,​​ மணிமகேலை விருதுபெற்ற அன்னை சுய உதவிக்குழுவுக்கு பாராட்டு விழா ஆகியவை அண்மையில் நடைபெற்றன.​ ​ நிகழ்ச்சிக்கு ஆட்சியர் ஜெ.​ உமாமகேஸ்வரி தலைமை வகித்து பரிசுகளை வழங்கி பேசியது:​ ​ பெண்களின் பின்தங்கிய நிலை தற்போது மாறி விட்டது.​ மகளிர் சுய உதவிக்குழுக்கள் பெண்களை முன்னேற்றத்துக்கு அழைத்துச் செல்கிறது.​ பெண்கள் பொருளாதாரத்தில் உயர்ந்தால்தான் வீடு,​​ நாடு,​​ சமுதாயம் முன்னேற்றமடையும்.​ ​ ​ மகளிர் சுய உதவிக்குழுவினர் வாழைநாரை மூலப்பொருளாக கொண்டு பல்வேறு பொருள்களை வியாபார நோக்கத்தோடு தயாரித்து விற்பனை செய்யலாம்.​ வாழை நாரைக்கொண்டு கை பை,​​ ஜோல்னா பை,​​ சிறு பைகள் அலங்கார பொருள்கள் செய்யலாம்.​ இதற்கான தேவைகள் அதிகமாக உள்ளன.​ இத்தொழில் செய்ய குறைந்த வட்டியில் கடன் வழங்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.​ எனவே,​​ மகளிர் சுய உதவிக்குழுவினர் வாழை நாரை மூலப்பொருளாக கொண்டு பல்வேறு பொருள்களை செய்ய முன்வர வேண்டும் என்றார்.​ ​ இந்நிகழ்ச்சியில்,​​ மகளிர்திட்ட அலுவலர் ராஜலட்சுமி,​​ கரூர் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் வளர்மதி சிதம்பரம்,​​ நகர்மன்ற கோகிலா மணி,​​ ஊராட்சி மன்றத் தலைவர் மல்லிகா கந்தசாமி,​​ வட்டார வளர்ச்சி அலுவலர் கோபிநாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.​ ​ முன்னதாக,​​ வட்டார வளர்ச்சி அலுவலர் ஆர்.​ உலகநாதன் வரவேற்றார்.​ துணை வட்டார வளர்ச்சி அலுவலர் உமாசங்கர் நன்றி கூறினார்.

குறிச்சொற்கள்: ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment