இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

மரபணு மாற்றப்பட்ட கத்தரிக்காய் வேண்டாம் : காஞ்சிபுரம் விவசாயிகள் வலியுறுத்தல்

மரபணு மாற்றப்பட்ட பி.டி., கத்தரிக்காயை அனுமதிக்க கூடாது என செங்கல்பட்டில் நடந்த மாவட்ட விவசாயிகள் குறை தீர்வு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர். கூட்டத்திற்கு கலெக்டர் சந்தோஷ் கே மிஸ்ரா தலைமை தாங்கினார். விவசாயிகள் பேசியதாவது: பெருமாள்(வேடபாளையம்): விவசாயத்திற்கு மருந்து வாங்கினால் கையெழுத்து வாங்கிக் கொள்கின்றனர். பில் கொடுப்பதில்லை. உத்திரமேரூர் தாலுகாவில் ஒரு ரேஷன் கார்டுக்கு 300 ரூபாய் வாங்குகின்றனர். கந்தசுவாமி(பாலூர்): பாலூர் பொதுப்பணித்துறை ஏரி 450 ஏக்கர் பரப்பளவு கொண்டது. நீர்ப்பாசன அளவு 2,547 ஏக்கர். வரத்து கால்வாய் தூர்ந்து விட்டதால், 50 ஆண்டுகளாக நீர்வரத்து இல்லை. பலமுறை மனு கொடுத்தும் பலனில்லை. சிவபெருமான்(பொதுப் பணித்துறை நிர்வாகப் பொறியாளர்): ஏரியையும், கால்வாயையும் பார்வையிட்டுள் ளோம்.
கால்வாயை விவசாயிகள் தூர் வார உள்ளனர். கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கலெக்டருக்கு பரிந் துரைத்துள்ளோம்.
சடகோபன்(ஊத்துக்காடு): விவசாய இயந்திரங்கள் கிடைக்க அதிகாரிகள் வழி செய்ய வேண்டும். வேளாண் மைத்துறையில் களப்பணியாளர்கள் குறைவு.
விவசாயம் தற்போது விஞ்ஞான விவசாயமாக மாறிவிட்டது. அதற்கேற்ப அதிகாரிகள் பயிற்சி அளிக்க வேண்டும். நம் மாவட்டத்தில் வேலை உறுதி திட்டத்தை ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங் களில் நடைமுறைப் படுத்தினால் விவசாயத்திற்கு ஆட்கள் கிடைப்பர்.
சிட்டா, பட்டா, பட்டா மாற்றம் கிடைக்காத நிலை உள்ளது. வேளாண்மை, தோட் டக்கலைத் துறை அதிகாரிகள் விவசாயிகளுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.
வேளாண்மைப் பொறியியல் துறை அலுவலர்: நடப்பு நிதியாண்டில் ஒதுக்கப்பட்ட 283 கருவிகளுக்கு வழங்கப்பட்ட 101 லட்சம் மதிப்பிற்கு மானியத் தில் 85 லட்சம் மானியம் வழங் கப்பட்டுள்ளது. மீதியுள்ள 16 லட்சம் மானியம் முதலில் விண்ணப்பிப்பவர்களுக்கு வழங்கப்படும்.
கலெக்டர்: விண்ணப்பம் வழங்குங்கள். இந்த ஆண்டு மானியம் முடிந்துவிட்டாலும் அடுத்த ஆண்டு மானியம் வழங்க முன்னுரிமை வழங்கப் படும்.
நேரு( தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர்): காஞ்சிபுரம், உத்திரமேரூர் பகுதிகளில் தரமற்ற பூச்சி மருந்துகளை கடைகளில் விற்கின்றனர். வேளாண்மைத்துறை அதிகாரிகள் சோதனை நடத்த வேண் டும். கிசான் கிரெடிட் கார்டால் பயன் கிடைக்கவில்லை.
கலெக்டர்: வங்கி அதிகாரிகள் கலந்து கொள்ளும் கூட்டங் களில் கலந்து கொண்டு கேளுங் கள்.
நேரு: உழவர் பாதுகாப்பு அட்டை திட்டத்தின் கீழ் மனு கொடுத்தவர்களுக்கு நிதியுதவி கிடைக்கவில்லை.
செங்கல்பட்டு பாலாற்றில் 30 அடி, 40 அடி மணல் எடுத்துவிட்டனர். மணல் எடுப்பதை தடுக்க வேண்டும்.
மரபணு மாற்றப்பட்ட பி.டி., கத்தரிக்காயை அனுமதிக்க கூடாது. அப்போதுதான் உள் நாட்டு கத்தரிக்காய் அழியாமல் பாதுகாக்கப்படும்.
அன்பழகன்(தாமல்): காஞ்சிபுரம் - காவேரிப்பாக்கம் இடை யே இயக்கப்பட்டு நிறுத்தப் பட்ட அரசு டவுன் பஸ் டி 40ஐ மீண்டும் இயக்க வேண்டும். பழையசீவரம் எஸ்.வி., சர்க்கரை ஆலையில் நிலுவைத் தொகையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குமார்(விவசாயிகள் சங்கம்): திருக்கழுக்குன்றம் வெள்ளப் பந்தல் கிராமத்தில் திருவாடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான 250 ஏக்கர் நிலம் உள்ளது. அதை அரசே வாங்கி விவசாயிகளுக்கு வழங்கி, தவணை முறையில் பணம் வசூலிக்க வேண்டும்.
சந்திரவேலவன்(சோகண்டி): சோகண்டி உயர்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் 15 பேர் ஆக்கிரமித்து வீடுகட்டி, விவசாயம் செய்து வருகின்றனர்.
ஊராட்சி தலைவரும் வீடு கட்டுங்கள். பட்டா வாங்கித் தருகிறேன் என்கிறார். கிராம நிர்வாக அலுவலரும் ஆட்சேபனையில்லா சான்றிதழ் வழங்குகிறார். இதுவரை மூன்று முறை உங்களிடம் புகார் கொடுத்தேன். நடவடிக்கை இல்லை.
கலெக்டர்: மனு கொடுங்கள்
அரும்புலியூர் விவசாயிகள்: டி.ஏ.பி., யூரியா மருந்துகள் கூட்டுறவு வங்கியில் கிடைப்பதில்லை.
கலெக்டர்: காவணிப்பாக்கம் வேளாண்மை கூட்டுறவு வங்கிக்கு 10 டன் யூரியா, 9.3 டன் டி.ஏ.பி., அனுப்பப்பட்டுள்ளது. வினியோகத்தில் குறைபாடு ஏற்பட்டுள்ளது. மக்களுக்கு போய் சேரவில்லை. அதிகாரிகள் கவனிக்க வேண்டும்.
கிருஷ்ணன்(மதுராந்தகம்): மதுராந்தகம் ஏரியிலிருந்து கீழப்பாக்கம் அணை மூலம் கிணார் ஏரிவாக்கம், கே.கே., புதூர், இருசமநல்லூர் பகுதிகள் பயன்பெற்று வந்தன. 1967ல் அணை உடைந்தது. இன்னும் சரி செய்யவில்லை. 1,300 ஏக்கர் நிலங்கள் விசாயம் செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளன.
பொதுப்பணித்துறை நிர்வாகப் பொறியாளர்: நாளை மறுநாள் நேரில் வந்து பார்க்கிறோம்.
கூட்டம் முடிந்ததும் கலெக் டரை சூழ்ந்து கொண்ட மெய் யூர் ராஜாம்பேட்டை மகளிர் குழு உறுப்பினர்கள், ஆடு மாடுகளை மேய்க்க முடியவில் லை.
ஏரி மற்றும் சுடுகாட்டை ஆக்கிரமித்து பயிர் செய்துள்ளனர். மழைக்காலத்தில் ஏரியில் தண்ணீர் தேங்கவிடாமல் ஏரியை ஆக்கிரமிப்பாளர்கள் உடைத்து விடுகின்றனர் எனப் புகார் தெரிவித்தனர்.

குறிச்சொற்கள்: ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment