இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

விளைச்சல் குறைவால் பல்லாரி பயிரிட்ட விவசாயிகள் கவலை



விளைச்சல் குறைந்ததால் பல்லாரி வெங்காயம் பயிரிட்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம், காளாஞ்சிபட்டி, அத்திக் கோம்பையை சுற்றியுள்ள பகுதிகளில் பல்லாரி வெங்காயம் பரவலாக பயிரிடப்பட்டுள்ளது. இவை பல இடங்களில் அறுவடை செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வானம் மேக மூட்டமாக காணப்பட்டதால் வெங்காயத் தாள்கள் சுருண்டு விளைச்சல் பாதிக் கப்பட்டன. பல இடங்களில் எதிர் பார்த்த அளவிற்கு மகசூல் இல்லை. வெங்காயமும் சிறியதாக காணப்பட்டது. நூறு நாள் வேலை திட்டம் காரணமாக விவசாய தொழிலாளர்கள் பற்றாக்குறை உள்ளது. இதனால் தொழிலாளர்களுக்கு அதிக கூலி கொடுக்க வேண்டி உள்ளது. பல்லாரி வெங்காயம் கிலோ 16 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இது விவசாயிகளுக்கு கட்டுபடியான விலையாகும். இருந்தாலும் விளைச் சல் குறைவாக இருப்பதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

குறிச்சொற்கள்: ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment