இயற்கை உரங்கள் தயாரிக்க உரிமம் : வேளாண்மை துறை அறிவிப்பு
9:33 AM இயற்கை உரங்கள் தயாரிக்க உரிமம் : வேளாண்மை துறை அறிவிப்பு, செய்திகள் 0 கருத்துரைகள் Admin
இயற்கை உரங்கள் மற்றும் உயிர் உரங்கள் தயாரிக்கவும், விற்பனை செய்யவும் உரிமம் பெற வேண்டும் என, வேளாண்மைத் துறை அறிவித் துள்ளது. உரக்கட்டுப்பாடு சட்டப் படி உரிமம் பெற்று இயற்கை உரங்கள் மற்றும் உயிர் உரங்கள் தயாரித்து வினியோகம் செய்யப் பட்டு வந்தது. இடையில் இயற்கை உரங்கள் மற்றும் உயிர் உரங்கள் தயாரிக்க இயற்றப்பட்ட சட்டத்தை நெறிமுறைப் படுத்துவதற்காக, இயற்கை உரங்கள் மற்றும் உயிர் உரங்கள் தயாரிக்க உரிமம் வழங்குவது, தற்காலிகமாக ரத்து செய் யப்பட்டிருந்தது. தற் போது அதற்கான சட்டம் அமல்படுத்தப் பட்டு உரம் உரிமம் வழங் கப்படுகிறது. எனவே இயற்கை உரம், மற்றும் உயிர் உரங்கள் தயாரிப்பவர்கள், உரக் கட்டுப்பாடு சட்டப்படி உரிமம் பெற்ற பிறகே தயாரித்து வினியோகம் செய்ய வேண்டும். உரிமம் பெறாமல் தயாரித்து வினியோகம் செய்பவர்கள் மீது, உரக் கட்டுப் பாடு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப் படும் என, காஞ்சிபுரம் வேளாண் மை இணை இயக்குனர் செல்வபிள்ளை தெரிவித் துள்ளார்.
குறிச்சொற்கள்: இயற்கை உரங்கள் தயாரிக்க உரிமம் : வேளாண்மை துறை அறிவிப்பு, செய்திகள்
பகிர்தல் மிக எளிமையானது,அழகானது