இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

நிலத்தடி நீர்மட்டம் குறைவால் விவசாயிகள் கவலை : போடியில் தரிசுகளாகும் விளை நிலங்கள்



தேனி மாவட்டம் போடி பகுதியில் நிலவும் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருவதால், தரை போர்வெல் அமைத்த விவசாயிகளின் பலலட்சம் ரூபாய் வீணாகியுள்ளது. குளம், கண்மாய்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, நிலத்தடி நீர்மட்டம் உயர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
போடி பகுதி விவசாயிகள் கிணற்று பாசனத்தையே பெரிதும் நம்பியுள்ளனர். பொய்த்து வரும் பருவ மழையினாலும், மழைநீரை சேமிக்கப்படும் குளம், கண்மாய்கள் ஆக்கிரமிப்புகளில் சிக்கியிருப்பதாலும், இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. ஓரளவு மழை கிடைத்தாலும், அத்தண்ணீரை சேமிக்க முடியாத வகையில் குளம், கண்மாய்களில் தனியார் ஆக்கிரமிப்புகள் இருக் கின்றன. பல மாதங்கள் தண்ணீர் தேங்க கூடிய இவற்றில், ஒன்றிரண்டு நாட்கள் கூட சேமிக்க முடியாத நிலை இருக்கிறது. இதனால் கிணறுகளில் நீர்ஊற்றுக்கள் பாதிக்கப் பட்டுள்ளன. நிலத்தடி நீர்மட்டமும் அதளபாதாளத்திற்கு சென்று வருகிறது.
தரிசுகளாகும் விளைநிலங்கள்: நிலத்திடி நீர் மலையடிவாரப் பகுதியிலேயே 200 அடிக்கு கீழ் இறங்கி விட்டது. சுற்றுப்புற கிராமங்களில் 400 அடிக்கு கீழ் நீர்மட்டம் சரிந்து விட்டது. மின் மோட்டார்களை மாற்றிவிட்டு போர்வெல் அமைத்து நீர் இறைக்க வேண்டிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். இதனால் செலவு அதிகமாவதால், சிறு விவசாயிகள் போர்வெல் அமைத்து மின் மோட்டார் அமைக்க முடியாத நிலையில் விளை நிலங்களை தரிசுகளாக போட்டுள்ளனர்.
தென்னை மரங்களை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் " சப்மெர்சியின் பம்ப்' அமைக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். "போர்வெல்' அமைத்தாலும் பெரும்பாலான இடங்களில் நீர் ஊற்று இல்லாமல் போய் விடுகிறது. சில போர்வெல்களில் நீர் ஊற்று அளவு குறைவாக இருக்கிறது. ஆயிரக்கணக்கான ரூபாய் செலவழித்து பல விவசாயிகள், இந்தவகையில் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
நடவடிக்கை தேவை: ஏற்கெனவே போதிய விளைச்சல் இல்லாமல் விவசாயிகள் சிரமம் அடைந்து வரும் நிலையில், நிலத்தடி நீர் மட்டமும் குறைந்து வருவதால் பெரும் பாலான விவசாயிகள் விளை நிலங்களை தரிசாக போட்டும், பிளாட்டுகள் போட்டும் விற்பனை செய்து வருகின்றனர். குளம், கண்மாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி நிலத்தடி நீர் மட்டம் உயர கலெக்டர் முத்துவீரன், பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குறிச்சொற்கள்: , , ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment