இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

முள்ளங்கி அறுவடை ஈரோடு மாவட்டம் கோபியில் ஆரம்பம்



ஈரோடு மாவட்டம் , கோபி சுற்று வட்டாரப் பகுதிகளில் முள்ளங்கி அறுவடை துவங்கியுள்ளது. திருமண சீஸன் காலமாக இருந்த போதிலும் அதிக வரத்தால் முள்ளங்கி விலை வெகுவாக குறைந்துள்ளது. கோபி அரக்கன்கோட்டை, தடப்பள்ளி மற்றும் கீழ்பவானி பாசன பகுதிகளில் நெல், மஞ்சள் மற்றும் கரும்பு உள்ளிட்ட பயிர்களை தொடர்ந்து, தோட்டக்கலை பயிர்களான கத்தரி, வெண்டை, முள்ளங்கி பயிர்களை விவசாயிகள் அதிகளவில் பயிரிட்டு வருகின்றனர். கோபி, பங்களாப்புதூர், மாக்கினாங்கோம்பை, கொளப்பலூர், வாணிப்புத்தூர், டி.என்.பாளையம், அத்தாணி, கள்ளிப்பட்டி, துறையம்பாளையம், சிறுவலூர், குருமந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் மூன்று மாதங்களுக்கு முன் வெண்டைக்காய், கத்தரிக்காய் மற்றும் முள்ளங்கி போன்ற பயிர்களை பயிரிட்டனர். தற்போது அறுவடை துவங்கியுள்ளது.



பொதுவாக திருமண சீஸன் காலங்களில் சாம்பார் மற்றும் பொறியல் வகைகளில் அதிகம் பயன்படுத்தப்படும் முள்ளங்கி, கத்தரிக்காய் போன்ற காய் வகைளுக்கு அதிக கிராக்கி ஏற்படும். இதனால், விலையும் அதிகமாக இருக்கும். கடந்த மாதம் ஒரு கிலோ வெள்ளை முள்ளங்கி 12 ரூபாய் வரை விற்றது. கோபி பகுதியில் முள்ளங்கி அறுவடை துவங்கியுள்ளது. இதனால், தற்போது முள்ளங்கி, கிலோ ஐந்து ரூபாயாக குறைந்துள்ளது. முள்ளங்கிக்கு விலை குறைவாக கிடைத்தாலும், திருமண சீஸன் காலம் என்பதால் உடனடியாக விற்பனையாகிறது. இதனால் கோபி பகுதியில் முள்ளங்கி பயிரிட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

குறிச்சொற்கள்: ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment