உற்பத்தி குறைவால் பருத்திக்கு கூடுதல் விலை
9:54 AM உற்பத்தி குறைவால் பருத்திக்கு கூடுதல் விலை, செய்திகள் 0 கருத்துரைகள் Admin
பருத்தி சாகுபடி மற்றும் பருத்தி துணி உற்பத்தி மூலம் மறைமுகமாகவும், நேரடியாகவும் லட்சக்கணக்கான பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கிறது. இதனால், பருத்தி உற்பத்தியை மத்திய, மாநில அரசுகளும் பல்வேறு வகையில் ஊக்குவிக்கின்றன. குறிப்பாக ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை திட்டத்தின் கீழ் பருத்தி பயிரிடப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் நீர் மற்றும் களை நிர்வாகம், பயிர் பாதுகாப்பு, ஊட்டச்சத்து முறைகள் விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது. ஈரோடு மாவட்டத்தில் எம்.சி.யு.-5, 12, 13, சுரபி மற்றும் எஸ்.வி.பி.ஆர்.-2 ஆகிய பருத்தி ரகங்கள் அதிகளவில் பயிரிடப்படுகிறது. கடந்த பத்தாண்டுகளுக்கு முன் பத்தாயிரம் ஹெக்டேரில் பருத்தி பயிரிடப்பட்டது. தற்போது, வெறும் 500 ஹெக்டேராக சுருங்கி விட்டது. மூன்று மாத பயிரான பருத்தியை பயிரிடும் விவசாயிகளும் பெருமளவில் குறைந்து விட்டனர்.
கோபி பகுதியில் சிறுவலூர், வெள்ளாங்கோயில், கொளப்பலூர், வேட்டைக்காரன் கோவில், அத்தாணி, கள்ளிப்பட்டி, துறையம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பருத்தி பயிரிடப்பட்டுள்ளது. சென்றாண்டு ஒரு கிலோ பஞ்சுக்கு 25 ரூபாய் வரை கிடைத்தது. மழை மற்றும் உற்பத்தி குறைவால் நடப்பாண்டு ஒரு கிலோ பஞ்சுக்கு 30 வரை கிடைக்கிறது. கோபி பகுதியில் குறைந்தளவில் பருத்தி பயிரிட்டிருந்தாலும். கூடுதல் விலை கிடைப்பதால் பருத்தி விவசாயிகள் சற்று தெம்பில் உள்ளனர். "பருத்தியுடன் ஆமணக்கு மற்றும் செண்டுமல்லி பயிர்களை விவசாயிகள் பயிரிட்டு வருவதால் கூடுதல் லாபம் கிடைக்கிறது.
குறிச்சொற்கள்: உற்பத்தி குறைவால் பருத்திக்கு கூடுதல் விலை, செய்திகள்
பகிர்தல் மிக எளிமையானது,அழகானது