இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

கொடிவேரி பழைய பாசனம் ஃபிப்., 15ல் நீர் நிறுத்தம்

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து கோபி அரக்கன்கோட்டை மற்றும் தடப்பள்ளி பாசனப் பகுதிக்கு திறக்கப்பட்டுள்ள தண்ணீர் வரும் 15ம் தேதியுடன் நிறுத்தப்படுகிறது. அரக்கன்கோட்டை மற்றும் தடப்பள்ளி பாசனப்பகுதியில் 24 ஆயிரம் ஏக்கரில் நெல், கரும்பு, மஞ்சள் போன்ற பயிர்கள் அதிகளவில் பயிரிடப்படுகிறது. இரண்டாம்போக சாகுபடிக்காக பவானிசாகர் அணையில் இருந்து கடந்த அக்டோபர் 1ம் தேதி கொடிவேரி அணைக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. கொடிவேரி அணையில் இருந்து அரக்கன்கோட்டை மற்றும் தடப்பள்ளி பாசன வாய்க்காலில் திறந்து விடப்பட்டது. நடப்பாண்டு முறை வைத்து வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டது.


அரக்கன்கோட்டை மற்றும் தடப்பள்ளி பாசனப் பகுதியில் இரண்டாம் போக சாகுபடியில் நெல், கரும்பு, மஞ்சள் ஆகிய பயிர்கள் தற்போது அறுவடை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதையடுத்து பவானிசாகர் அணையில் இருந்து அரக்கன்கோட்டை மற்றும் தடப்பள்ளி பாசனத்துக்கு திறந்து விடப்பட்ட தண்ணீர் வரும் 15ம் தேதியுடன் நிறுத்தப்படுகிறது. இனி முதல்போக சாகுபடிக்காக, அணை நீர் இருப்பை பொறுத்து வரும் ஏப்ரல் 15ம் தேதி பவானிசாகர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிச்சொற்கள்: , ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment