92 லட்சம் மெ.டன் நெல் சம்பா பருவத்தில் உற்பத்தி
9:53 AM 92 லட்சம் மெ.டன் நெல் சம்பா பருவத்தில் உற்பத்தி, செய்திகள் 0 கருத்துரைகள் Admin
ஈரோடு மாவட்டத்தில் சம்பா பருவத்தில் நெற்பயிர் அறுவடைப்பணி நடந்து வருகிறது. 2.92 லட்சம் மெட்ரிக் டன் நெல் உற்பத்தியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சம்பா பருவத்தில் 29 ஆயிரத்து 209 ஹெக்டேரில் நெல் சாகுபடி செய்யப்பட்டது. இதில், 13 ஆயிரத்து 229 ஹெக்டேரில் செம்மை நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. செம்மை நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ள வயல்களில் ஒரு ஹெக்டேருக்கு குறைந்தபட்சம் 9,000 கிலோவும், அதிகபட்சம் 13 ஆயிரத்து 525 கிலோவும் மகசூல் கிடைத்துள்ளது. செம்மை நெல் சாகுபடி செய்யாத வயல்களில் இருந்து ஹெக்டேருக்கு அதிகபட்சமாக 9,000 கிலோ விளைச்சல் மட்டுமே கிடைக்கிறது. சம்பா பருவ அறுவடையில் இரண்டு லட்சத்து 92 ஆயிரத்து 804 மெட்ரிக் டன் நெல் உற்பத்தி எதிர்பார்க்கப்படுகிறது.
சிங்கம்பேட்டை கிராமத்தை சேர்ந்த மோகன் 25 ஏக்கரில் சி.ஆர்.1009 ரக நெல்லை, ஒற்றை நாற்று நடவு முறையில் சாகுபடி செய்துள்ளார். இந்த வயலில் ஈரோடு வேளாண் இணை இயக்குனர் கோபால், துணை இயக்குனர் மனோகரன், அம்மாபேட்டை வேளாண் உதவி இயக்குனர் திரூமூர்த்தி, முன்னோடி விவசாயிகள் பெரியசாமி, அர்த்தனாரி, குணசேகரன் மற்றும் சம்பூரணம் முன்னிலையில் அறுவடை விழா நடந்தது. ""செம்மை நெல் சாகுபடி மேற்கொண்டால் ஒரு ஹெக்டேருக்கு 2.262 டன் கூடுதல் விளைச்சலும், 23 ஆயிரத்து 750 ரூபாயும் கூடுதல் வருவாயும் கிடைக்கிறது. எனவே, நவரை பட்டத்தில் நெல் சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகள், தவறாமல் செம்மை நெல் சாகுபடியை மேற்கொண்டு கூடுதல் மகசூல் பெறலாம்,'' என வேளாண் இணை இயக்குனர் கோபால் கூறினார்.
குறிச்சொற்கள்: 92 லட்சம் மெ.டன் நெல் சம்பா பருவத்தில் உற்பத்தி, செய்திகள்
பகிர்தல் மிக எளிமையானது,அழகானது