இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

பி.டி.​ கத்தரிக்காய் விவகாரம்​: வர்த்தக ​நோக்கில் மத்திய அரசு பரிசீலனை- ஜகி வாசுதேவ் பேட்டி



மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்தரிக்காய்க்கு ​(பி.டி.கத்தரிக்காய்)​ அனுமதி அளிப்பது தொடர்பாக மத்திய அரசு வர்த்தக நோக்கில் பரிசீலனை செய்து வருகிறது என ஈஷா யோக மைய நிறுவனர் ஜகி வாசுதேவ் கூறினார்.​ ​ இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியது:மரபணு மாற்றம் செய்யப்பட்ட உணவுப் பொருள்களில் மிகுந்த நச்சுத்தன்மை உள்ளது.​ பல ஆயிரம் ஆண்டுகளாக கத்தரிக்காய் சாகுபடி நன்றாக உள்ளது.இந் நிலையில்,​​ ஆரோக்கியத்தைப் பாதிக்கும் பி.டி.​ ரக பயிர்களை சந்தைக்கு கொண்டு வரத் தேவையில்லை.​ இது பொறுப்பற்ற செயல்.​ பி.டி.​ கத்தரிக்காய்க்கு அனுமதி அளித்தால் அனைத்து உணவுப் பொருள்களும் சந்தைக்கு வந்துவிடும்.​ இது மிகுந்த ஆபத்தை விளைவிக்கும்.​ ​ ஐரோப்பா உள்பட பல்வேறு நாடுகளில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.​ அமெரிக்கா,​​ ஜப்பான் போன்ற நாடுகளில் அரசை மீறி தனியார் ஆதிக்கம் செலுத்தி வருவதால் வேறு வழியின்றி அங்கு பி.டி.​ ரக பயிர்கள் பயிரிடப்பட்டன.​ அதன் பாதிப்பு இன்றும் தெரிகிறது.பி.டி.​ பயிர்களை பயிரிடக் கூடாது என வேளாண் விஞ்ஞானிகள்,​​ இயற்கை ஆர்வலர்கள்,​​ விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.​ இருப்பினும்,​​ மக்களின் நலனில் அக்கறை கொள்ளாமல் பி.டி.​ ரக பயிர்களை சந்தைக்கு கொண்டு வர மத்திய அரசு வர்த்தக நோக்கில் பரிசீலனை செய்து வருகிறது.​ ​ வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து விதைகளை வாங்கும் நிலை தொடர்ந்தால் இந்தியா அடிமைப்படும் சூழல் உருவாகும்.​ நாட்டில் பல விதமான விதைகள் குறைந்து வருகின்றன.​ 60 சதம் பேர் சைவ உணவுகளையும்,​​ 40 சதம் பேர் அசைவ உணவுகளையும் விரும்பிச் சாப்பிடுகின்றனர்.​ மனிதனுக்குத் தேவையான சத்து,​​ சைவ உணவில்தான் இருக்கிறது.​ ஆனால்,​​ அதற்கு நல்ல விதைகள் தேவை.​ அவற்றை இயற்கையான முறையில் உருவாக்க வேண்டும்.​ ​ நல்ல விதைகள் விவசாயிகள் கையில் இருக்க வேண்டும்.​ அதனால்,​​ மேற்கொள்ளும் ஆராய்ச்சிகள் பக்குவமாகவும்,​​ இயற்கையாகவும் இருப்பது அவசியம்.மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்தரிக்காய்க்கு அனுமதி அளிப்பது தொடர்பாக அவசரம் காட்டப்படமாட்டாது என தமிழக அரசு அறிவித்துள்ளது விவசாயிகளை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.​ இருப்பினும்,​​ அவற்றை முற்றிலும் தடை செய்ய வேண்டும்.​ இது குறித்து ஈஷா தரப்பில் அரசிடம் வலியுறுத்தப்படும்.மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்தரியை தடை செய்து அனைத்து மக்களையும் காக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.

குறிச்சொற்கள்: , , ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment