பொன்மணி நெல் கொள்முதல் செய்ய மறுப்பு : ஸ்ரீமுஷ்ணம் அருகே விவசாயிகள் அலைக்கழிப்பு
8:13 AM சிறப்பு, செய்திகள், தலைப்பு, பொன்மணி நெல் கொள்முதல் செய்ய மறுப்பு 0 கருத்துரைகள் Admin
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அடுத்த கள்ளிப்பாடி நேரடி கொள் முதல் நிலையத்தில் குறிப் பிட்ட ரக நெல் கொள்முதல் செய்ய மறுத்து விவசாயிகளை அலைக்கழித்து வருகின்றனர்.
ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் சம்பா பருவ நெல்லை வியாபாரிகள் குறைந்த விலைக்கு கொள்முதல் செய்து வந்ததால் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். இதனை கருத்தில் கொண்டு அரசு ஸ்ரீமுஷ் ணம், ஆனந்தகுடி, குணமங்கலம், கள்ளிப்பாடி, ஸ்ரீநெடுஞ்சேரி உள்ளிட்ட இடங்களில் நேரடி கொள் முதல் நிலையங்களை திறந்து விவசாயிகளிடம் இருந்து நெல்லை நேரடியாக கொள்முதல் செய்து வருகிறது. அறுவடை சீசன் துவங் கிய நேரத்தில் அனைத்து ரக நெல்லையும் அதன் தரத்திற்கு ஏற்ப விலை நிர்ணயித்து கொள்முதல் செய்தனர். தற்போது வரத்து அதிகரிக்கவே நெல்லை விற்பனை செய்ய நேரடி கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் நான்கு நாட்கள் காத்திருக்க வேண்டியுள்ளது.
இந்நிலையில் கள்ளிப் பாடி மையத்தில் கடந்த 2ம் தேதி வரை கொள்முதல் செய்த பொன்மணி ரக நெல் தரம் குறைவாக இருப்பதாக கூறிய தரக்கட்டுப்பாட்டு அதிகாரி, இனி பொன்மணி ரக நெல்லை கொள்முதல் செய்ய வேண்டாம். அதனை மீறி கொள்முதல் செய்ய வற்புறுத்தினால் மாதிரி நெல்லை சிதம்பரம் அலுவலகத்திற்கு அனுப்பி சான்று பெற்ற பின் கொள்முதல் செய்ய கூறியுள்ளார்.
இதனால் கடந்த 2ம் தேதி பொன்மணி ரக நெல்லை விற்பனைக்கு கொண்டு வந்த விவசாயிகள் கடந்த நான்கு நாட் களாக நெல்லை விற்காமல், இரவு-பகலாக காவல் காத்து வருகின்றனர். சுற்று வட்டாரத்தில் உள்ள மற்ற நேரடி கொள் முதல் மையங்களிலும் பொன்மணி ரக நெல் கொள்முதல் செய்யும் போது கள்ளிப்பாடி மையத்தில் மட்டும் மறுப்பது ஏன் என புரியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.
கள்ளிப்பாடி விவசாயிகளை காத்திட விற்பனைக்கு கொண்டு வந்துள்ள பொன்மணி ரக நெல் மூட்டைகளை அதன் தரத்திற்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்து கொள்முதல் செய்திட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குறிச்சொற்கள்: சிறப்பு, செய்திகள், தலைப்பு, பொன்மணி நெல் கொள்முதல் செய்ய மறுப்பு
பகிர்தல் மிக எளிமையானது,அழகானது