வயல்களில் மயில்கள் அட்டகாசம்: விவசாயிகள் விரக்தி
9:47 AM செய்திகள், வயல்களில் மயில்கள் அட்டகாசம்: விவசாயிகள் விரக்தி 0 கருத்துரைகள் Admin
இராமநாதபுரம் வாலாந்தரவை பகுதியில் மயில்கள் நெற்பயிர்களை நாசம் செய்து வருவதால், விவசாயிகள் விரக்தியடைந்துள்ளனர். கடந்தாண்டு இயற்கையின் சீற்றத்தால் விவசாயிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டனர்.அரசின் நிவாரண தொகையை பெற்ற விவசாயிகள் நடப்பாண்டில் தாமதமாக பணிகளை துவக்கினர். பல்வேறு வயல்களில் பயிர்களில் நோய் தாக்கப்பட்டு சேதமானது.இந் நிலையில் வளர்ந்த நெற் பயிர்களை மயில்கள் தின்று வருவதால் விவசாயிகள் திண் டாடி வருகின்றனர்.
விவசாயி முருகேசன் (உடைச்சியார் வலசை)கூறியதாவது: பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் விவசாய பணிகளை செய்து வருகிறோம்.இயற்கையின் சீற்றத்திலிருந்து தப்பித்து வளரும் பயிர்களை ,கூட்டமாக திரியும் மயில்கள் நாசம் செய்கிறது. வயலில் உருவ பொம்மைகள் செய்து வைத்தும் எவ்வித பலனுமில்லை.விரட்டசென்றால் செடிகளுக்குள் பதுங்கி விடுகிறது, என்றார்.
குறிச்சொற்கள்: செய்திகள், வயல்களில் மயில்கள் அட்டகாசம்: விவசாயிகள் விரக்தி
பகிர்தல் மிக எளிமையானது,அழகானது