இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

மல்லிகை விலை குறைகிறது



மதுரையில் மல்லிகை சீசன் ஆரம்பித்துள்ளதால், விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த வாரம் அடுத்தடுத்து முகூர்த்த நாட்கள் காரணமாக, ஒரு கிலோ மல்லிகை 700 ரூபாய் வரை விற்கப்பட்டது. மல்லிகை வரத்து குறைவாக இருந்ததும் ஒருகாரணம். தற்போது சீசன் ஆரம்பித்துள்ளதால் கிலோ 250 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.



""அடுத்த வாரம் மேலும் விலை குறைய வாய்ப்புள்ளது,'' என்கிறார் பூ மார்க்கெட் சங்கத் தலைவர் ராமச்சந்திரன். மற்ற பூ விலை குறித்து கூறுகையில், ""ஒரு கிலோ பிச்சிப்பூ 300 ரூபாய், ரோஜா 40, சம்பங்கி 50, கனகாம்பரம் 400, செவ்வந்தி 40, அரளி 40, மரிக்கொழுந்து 30-40, மெட்ராஸ் மல்லி 100, கோழிக்கொண்டை 40 ரூபாய்க்கு விற்கப்படுகிறது,'' என்றார்.

குறிச்சொற்கள்: ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment