.மரபணு மாற்ற கத்திரிக்காய் சர்ச்சை : விவாத மேடையில் காரசார பரிமாற்றம்
9:46 AM .மரபணு மாற்ற கத்திரிக்காய் சர்ச்சை : விவாத மேடையில் காரசார பரிமாற்றம், செய்திகள் 0 கருத்துரைகள் Admin
""மரபணு மாற்ற கத்தரிக்காயை அனுமதிப்பது தொடர்பான முழு அளவிலான ஆய்வு முடிவடையாத நிலையில், அவற்றை அனுமதிக்க சில அமைச்சர்கள், அதிகாரிகள் அவசரம் காட்டுகின்றனர்,'' என விவாத மேடையில் குற்றம் சாட்டப்பட்டது.
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் குன்னூர் ஒய்.எம்.சி.ஏ., அரங்கில் "மரபணு மாற்ற கத்தரிக்காய் குறித்த விவாத மேடை நடத்தப்பட்டது. அறிவியல் இயக்க மாநில துணை தலைவர் சுப்ரமணியம் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசுகையில், ""கடந்த கால வரலாற்றை புரட்டி பார்க்கும் போது, ஒரு புதிய தொழில்நுட்பம் வரும் போது அதை ஒரு சாரார் எதிர்ப்பது வழக்கமாகிவிட்டது. இருப்பினும், மரபணு மாற்ற உணவுப் பொருட்களை ஐரோப்பிய நாடுகள் தங்கள் நாட்டில் பயிர் செய்யவும், விற்கவும் தடை விதித்துள்ளன. எனவே, மரபணு மாற்ற கத்தரிக்காயை இந்தியாவில் அனுமதிக்கக் கூடாது,'' என்றார்.
குன்னூர் பாஸ்டியர் ஆய்வக நிறுவன உதவி இயக்குனர் டாக்டர். வெங்கட்ரமணா பேசுகையில், ""மரபணு மாற்ற கத்தரிக்காயை பொறுத்தவரை அரைகுறை ஆராய்ச்சிகள் மட்டும் செய்யப்பட்டு, பன்னாட்டு நிறுவனத்தின் வியாபார நோக்கத்திற்காக அவசர கதியில், இந்தியாவில் அவற்றை அறிமுகப்படுத்த முயற்சி நடக்கிறது; மக்கள் இதை எதிர்க்க வேண்டும்,'' என்றார்.
பாஸ்டியர் நிறுவன இளம் விஞ்ஞானி டாக்டர். சிவானந்தா பேசுகையில், "" கத்தரிக்காயின் மரபணுவுடன் பாஸில்லஸ் துரங்கசீயஸ் என்ற மண்ணிலுள்ள பாக்டீரியாவின் மரபணுவை இணைத்து பி.டி. கத்திரிக்காய் உற்பத்தி செய்யப்படுகிறது. கத்தரிக்காயில் உண்டாகும் பூச்சிகளை கொல்லும் ஆற்றல் கொண்ட ஒருவித விஷப்பொருளை உள்ளடக்கிய புரதத்தை உற்பத்தி செய்யும் இந்த பாக்டீரியா, கத்திரிக்காயை உண்ணும் மனித உடலில் எத்தகைய மாற்றத்தை உண்டு பண்ணும் என்பதை குறித்து சரியான தகவல்கள் இல்லை,'' என்றார்.
குறிச்சொற்கள்: .மரபணு மாற்ற கத்திரிக்காய் சர்ச்சை : விவாத மேடையில் காரசார பரிமாற்றம், செய்திகள்
பகிர்தல் மிக எளிமையானது,அழகானது