இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

கத்தரிக்காய் கொள்முதல் விலை உயர்வு

கத்தரிக்காய் கொள்முதல்விலை கிலோவிற்கு ஐந்து ரூபாய் உயர்ந்துள்ளதால், பல்லடம் பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.பல்லடம், செலக்கரிச்சல், ஜல்லிப்பட்டி, செஞ்சேரிமலை, செஞ்சேரிப்புத்தூர், கிருஷ்ணாபுரம், மந்திரிபாளையம், பச்சார்பாளையம், தாளக்கரை மற்றும் குண்டடம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் கத்தரிக்காய் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது அறுவடை சீசன் என்பதால், காய்பறிப்பு பணிகள் நடந்து வருகின்றன.இங்கு அறுவடை செய்யப்படும் கத்தரிக்காய் திருப்பூர், கோவை, கேரளா மார்க்கெட்டுகளுக்கு தினமும் வேன்களில் அனுப்பப்படுகின்றன. கடந்த வாரம் திருப்பூர் மார்க்கெட்டில் ஒரு கிலோ கத்தரிக்காய் 15 ரூபாய்க்கு விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்டது. இந்த விலை கட்டுப்படியானதாக இருந்ததால் கத்தரி விவசாயிகள் உற்சாகம் அடைந்தனர்.



கடந்த இரண்டு நாட்களாக கிலோவிற்கு ஐந்து ரூபாய் அதிகரித்து, கொள்முதல் விலை 20 ரூபாயாக உயர்ந்துள்ளது. திருப்பூர் காய்கறி மார்க்கெட்டில் பல்லடம் பகுதி விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.லோவிற்கு ஐந்து ரூபாய் கொள்முதல் விலை உயர்ந்துள்ளதால், பல்லடம் பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். விவசாயிகள் கூறுகையில், ""திருப்பூர் மார்க்கெட்டிற்கு ஒட்டன்சத்திரம், திண்டுக்கல் பகுதிகளில் இருந்து மிக குறைந்த அளவில் கத்தரிக்காய்வரத்து உள்ளது; கத்தரிக்காய் சீசன் குறைவாக இருப்பது போன்ற காரணங்களால், விலை "கிடுகிடு' என <உயர்ந்துள்ளது,'' என்றனர்.

குறிச்சொற்கள்: ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment