இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

வளம் தரும் கம்மல் பாசி

சில ஆண்டுகளாக பெருகி வரும் வேளாண் உற்பத்தி செலவுகள்,​​ விவசாய முதலீடுகள்,​​ இயற்கைச் சீற்றங்கள் மற்றும் சந்தை பிரச்னைகள் ஆகியவற்றை விவசாயிகள் சந்திக்க நேரிடுகிறது.விவசாயிகள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் எளிய வேளாண் தொழில்நுட்பங்களை நோக்கி தங்கள் கவனத்தை திருப்பவும்,​​ தங்களின் வயல்களில்,​​ தோட்டங்களில் எளிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பார்க்கும் ஆர்வம் ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் குறைந்த செலவில் விவசாயிகள் வீட்டுத் தோட்டங்களில் எளிதாக உருவாக்கி அதிகளவில் பயன்படுத்தப்படும் "கம்மல் பாசி' என்றழைக்கப்படும் அசோலா பயன்பாடு பற்றி தமிழக விவசாயிகள் தெரிந்து கொள்வது அவசியம் என அண்ணாமலைப் பல்கலைக் கழக வேளாண் விரிவாக்கத்துறை விரிவுரையாளர் தி.ராஜ்பிரவீன் தெரிவித்துள்ளார்.தயாரிப்பு முறைகள்:​​ உலகின் மிகத் தொன்மையான உயிரினங்களில் பெரணி வகையைச் சேர்ந்த "அசோலா' என்றழைக்கப்படும் கம்மல் பாசி.​ பார்ப்பதற்கு கம்மல் போல் இருப்பதால் கிராமத்தில் விவசாயிகள் குறிப்பாக மகளிர் இவ்வாறு செல்லமாக அழைக்கின்றனர்.கம்மல் பாசியில் உள்ள "அனபீனா அசோலா' என்ற பாக்டீரியாக்கள் காற்றில் உள்ள தழைச்சத்தை கிரகித்து பயிர்களுக்கு தரும் சிறப்பு பெற்றது.விவசாயிகள் தங்கள் வயல்கள்,​​ தோட்டங்கள்,​​ வீடுகளில் கம்மல் பாசி தயாரிக்க ஒரு தொட்டியில் அல்லது குழியின் மேல் பாலிதீன்ஷீட் அல்லது தார்பாய் அமைத்து செங்கல்களை ​(படத்தில் உள்ளது போல்)​ நன்றாக அடுக்கிக் கொள்ள வேண்டும்.பின்னர் தொட்டியில் தேவைக்கேற்ப தண்ணீரை நிரப்பி ஒரு கிலோ சாணம்,​​ பாறைத்தூள் ஒரு கைப்பிடி,​​ அசோலா விதைகள் ஒரு கைப்பிடி போட்டு நன்றாக கலக்கிவிடவும்.அடுத்த ஒரு வாரத்தில் 10 மடங்கு அளவுக்கு "அசோலா' பெருகிவிடும்.​ மீண்டும் அசோலா வேண்டும் என்றால் சாணம் மற்றும் பாறைத்தூள் மட்டும் தொட்டியில் போட்டால் போதும் மேலும் பெருக தொடங்கிவிடும்.இவ்வாறு தயாரிக்கப்படும் அசோலாவை நெல் வயலுக்கு இட்டு விவசாயிகள் எளிதாக அதிக மகசூல் பெற முடியும்.​ வயலில் இரண்டாம் களை எடுக்கும் போது அசோலாவை வயலில் வைத்து மிதித்து விட வேண்டும்.​ சூரிய ஒளிபடும் பகுதியில்தான் இந்த வேளாண் முயற்சியை மேற்கொள்ள வேண்டும்.​ ​ தழைச்சத்து,​​ மணிச்சத்து மற்றும் சாம்பல்சத்து என முக்கியமான சத்துகள் ஒருங்கே கொண்ட தாவரமாக "கம்மல் பாசி' உள்ளதால் விவசாயிகள் குறைந்த செலவில் இயற்கை முறையில் அதிக லாபம் பெற முடியும்.பிற பயன்கள்:​​ கம்மல் பாசியை கறவை மாடுகளுக்கு கொடுத்தால் அதிகபட்சமாக 2 லிட்டர் வரை பால் கிடைப்பதாக அதை பயன்படுத்தும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.​ மேலும் தீவனச் செலவுகள் 25 சதவீதம் வரை குறைவதாகவும் கூறுகின்றனர்.​ கோழிகள் கம்மல் பாசியை உண்டு அதிக முட்டைகளை தருவதாகவும்,​​ மீன்கள் வேகமாக வளர்வதாகவும் பண்ணை மகளிர் தெரிவிக்கின்றனர்.கம்மல் பாசி வளர்க்கப்படும் நிலங்களில் கொசுக்கள் வராது என்பதால் கொசுக்களை அழிக்க கம்மல் பாசியை விவசாயிகள் வளர்த்து பயன் பெறலாம்.எனவே தமிழக விவசாயிகள் குறைந்த செலவில் அதிக லாபம் மற்றும் மகசூல் பெறவும்,​​ கால்நடைகளுக்கு நல்ல தீவனமாகவும் பயன்படும் கம்மல் பாசி சாகுபடியில் ஈடுபடலாம் என விரிவுரையாளர் தி.ராஜ்பிரவீன் தெரிவித்துள்ளார்.

குறிச்சொற்கள்: ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment