இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

ஈமு கோழி இறைச்சி விற்க திருப்பூரில் ஸ்டால்: கால்நடை பராமரிப்புத்துறை திட்டம்

ஈமு கோழி இறைச்சி விற்பனை செய்யும் ஸ்டால், திருப்பூரில் துவக்க கால்நடை பராமரிப்பு துறை திட்டமிட்டுள்ளது.ஆஸ்திரேலியா நாட்டின் தேசிய பறவையான ஈமு கோழிகள், இந்தியாவில் அதிகமாக வளர்க்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் ஓலப்பாளையம், வெள்ளகோவில், வைரமடை ஆகிய பகுதிகளில் அதிக அளவில் வளர்க்கப்படுகின்றன. இக்கோழிகளின் பயன்களை எடுத்துக்கூறும் விழிப்புணர்வு நிகழ்ச்சி, கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை சார்பில் திருப்பூரில் நடத்தப்பட்டது. சென்னிமலை. வெள்ளகோவில், அவிநாசி, காமநாயக்கன்பாளையம் பகுதிகளில் இருந்து ஈமு கோழிப்பண்ணை வைத்திருக்கும் 50 பேர் பங்கேற்றனர்.ஈமு கோழியை பற்றிய அட்வைஸ்:ஈமு கோழிகள் எந்தவொரு தட்பவெப்ப நிலையி<லும் வளரக்கூடியது. நோய் எதிர்ப்புச்சக்தி அதிகம் கொண்டது. பறக்கும் இனத்தை சார்ந்த இப்பறவையால், பறக்க





இயலாது. ஒன்றரை ஆண்டுகளான கோழிகள் 40 முதல் 50 கிலோ எடை இருக்கும்; 50 கி.மீ., வேகத்தில் ஓடக்கூடியது. ஆயுள்காலம் 40 முதல் 50 வயது வரை.இக்கோழிகள் 18 மாதங்களானதும் முட்டையிடும். முதல் பருவத்தில் 15 முதல் 20 முட்டைகள் வரையும், இரண்டாவது மற்றும் மூன்றாவது பருவங்களில் 20 முதல் 35 முட்டைகள், நான்காவது பருவத்தில் 40 முட்டைகளுக்கு மேல் இடும். இக்கோழி வகையில் ஆண் கோழிகளே முட்டையை அடைகாக்கும்.வியாபார ரீதியாக லாபம் அதிகம் ஈட்டி தருவதால், இக்கோழிகள் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, பிரான்ஸ், ஜப்பான் போன்ற நாடுகளில் அதிகமாக வளர்க்கப்படுகின்றன. இக்கோழி வகையில் கிடைக்கும் இறைச்சி "ரேட் மீட்' வகையை சார்ந்தது. இதில், 0.5 சதவீதம் மட்டுமே கொழுப்பு சத்து உள்ளது. புரோட்டீன் கால்சியம் அதிகமாகவும் நோய் எதிர்ப்பு சக்தி மருந்தாகவும் உள்ளது. இருதய நோயாளிகள், சர்க்கரை வியாதியுள்ளவர்கள் அதிகம் பயன்படுத்தலாம். 50 கிலோ எடை கொண்ட ஒரு ஈமு கோழியில் இருந்து 20 முதல் 25 கிலோ எலும்பு நீக்கிய இறைச்சி பெற முடியும். ஒரு கிலோ ஈமு கோழி கறி 300 முதல் 350 வரை





விற்பனையாகிறது.மற்ற இறைச்சி ரகங்களுடன் ஒப்பிடுகையில், கொழுப்பு சத்து மிகவும் குறைவு; ஆட்டில் 23.40 கிராம்; கோழியில் 4.31 கிராம் கொழுப்பு இருக்கும். ஈமு கோழியில் 1.53 கிராம் மட்டுமே கொழுப்பு இருக்கும். உடலுக்கு தேவையான புரதச்சத்து இவ்வகை கோழிகளில் அதிகமாக உள்ளது. பொதுவாக, ஆட்டில் 16.6 கிராம்; கோழியில் 20.1 கிராம் புரதச்சத்து இருக்கும். ஆனால், ஈமு கோழியில் 22.4 கிராம் புரதச்சத்து கட்டாயம் இருக்கும். இக்கோழியின் உடலில் இருந்து 4 முதல் 5 லிட்டர் வரை ஆயில் எடுக்கப்படுகிறது. ஒரு லிட்டர் ஆயில் ரூ.2,500 வரை சந்தையில் விலை போகிறது. இந்தியாவில் மொத்தம் 14 நிறுவனங்கள்





இந்த ஆயிலை வாங்கி விற்பனை செய்கின்றன. ஈமு கோழியின் ஆயில் சரும நோய்கள், எலும்பு உராய்தல், தீப்பூண்கள், சொரியாஸிஸ் போன்றவற்றுக்கு சிறந்த வலி நிவாரணி. இதேபோல் முடி உதிர்வதை தடுக்க, அழகுசாதன பொருட்கள் தயாரிக்கவும் பயன்படுகிறது.இதன் தோல் 6 சதுர அடி கொண்டது. மதிப்புமிக்க பெல்ட், பர்ஸ், கோட், ஆக்ஸ், சீட் கவர்கள் தயாரிக்க பயன்படுகிறது. இதன் இறகுகள் துடைப்பான்கள் தயாரிக்கவும், கணிணி போன்ற சாதனங்களின் கவர்கள் செய்வதற்கும் பயன்படுகிறது. இதன் நகங்கள் ளபளப்பாக இருப்பதால், அணிகலன்கள் செய்யவும் பயன்படுகிறது, என்று விளக்கப்பட்டது.திருப்பூர் மாவட்ட கால்நடை





பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் உமாபதி கூறுகையில், ""அதிக லாபம் தரக்கூடிய இக்கோழிகள் வளர்க்கப்பட்டும், இதுவரை விற்பனைக்கு வராமலேயே போய்விட்டது. தற்போது, இக்கோழி இறைச்சியை விற்பனைக்கு கொண்டு வர முழு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய புரதச்சத்து அதிகமாக உள்ளது, '' என்றார்.திருப்பூர் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை கழக தலைவர் செல்வராஜ் கூறியாதாவது:ஆடு, கோழியினங்களை போல் இல்லாமல், சுவையில் முற்றிலும் மாறுபட்டது. பிராய்லர் கோழிகள் 42 நாட்கள், நாட்டு கோழிகள் 110 நாட்களில் இறைச்சிக்காக கொண்டு வரப்படும். ஆடுகள் நான்கு மாதங்களில் இறைச்சிக்காக கொண்டு வரப்படும். ஈமு கோழிகள் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே இறைச்சிக்காக கொண்டு வரப்படும். அதிலும் லாபம் அதிகமாக தரக்கூடியது. ஆட்டு இறைச்சியை போன்றே தன்மை கொண்டது.நெருப்புக்கோழி வகையைச் சார்ந்தது. இதன் உடலில் ரத்த சிவப்பணுக்கள் அதிகமாக இருக்கும்.





இதன் இறைச்சியில் குறைந்தது 5.5 கிராம் இரும்புச்சத்து நிறைந்திருக்கும். ஒரு முட்டை 750 கிராம் வரை இருக்கும். இந்த முட்டைகள் 1,200 ரூபாய் முதல் 1,500 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றன. சந்தையில் மக்களால் அதிகம் தெரிந்து கொள்வதற்காக, ஈமு இறைச்சி விற்கும் ஸ்டால் திருப்பூரில் அமைக்கப்பட உள்ளது, என்றார்.கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் பிரான்சிஸ் ராமகிருஷ்ணன் <உட்பட பலர் பங்கேற்றனர்.

குறிச்சொற்கள்: , , ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment