தேங்காய் கொள்முதல் நிலையம் விவசாயிகள் மாநாட்டில் வலியுறுத்தல்
7:23 AM சிறப்பு, செய்திகள், தலைப்பு, தேங்காய் கொள்முதல் நிலையம் விவசாயிகள் மாநாட்டில் வலியுறுத்தல் 0 கருத்துரைகள் Admin
இந்திய கம்யூ., விவசாயிகள் சங்கத்தின் ஸ்ரீவி., தாலுகா மாநாடும், விளக்க பொதுக்கூட்டமும் மகாராஜபுரத்தில் நடந்தது. தாலுகா செயலாளர் ராமதாஸ் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சீனிவாசன் முன்னிலை வகித்தார். மாவட்ட தலைவர் முருகேசன் வரவேற்றார். ராமசாமி எம்.எல்.ஏ., துவக்கினார். முன்னாள் எம்.பி., அழகிரிசாமி தீர்மானங்களை விளக்கி பேசினார்.
மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங் களாவது: ஸ்ரீவி., பகுதியில் தென்னை விவசாயம் அபரிதமாக இருந்தும் அதை உக்குவிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தேங்காய்களை வியாபாரிகள் சொல்லும் விலைக்கே விற்றாகவேண்டிய நிலை விவசாயிகளுக்கு உள்ளது. இதை தடுக்க விவசாயிகளுக்கு தேங்காய்க்கு உரிய விலை கிடைக்க அரசு தேங்காய் கொள்முதல் நிலையத்தை துவக்கி நேரடி கொள்முதல் செய்ய வேண்டும்.
கரும்பு விவசாயிகளை காக்க உரிய விலையும், உடனடி பணப்பட்டுவாடாவும் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். விருதுநகர் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பின்னர் நடந்த நிர்வாகிகள் தேர்வில் தாலுகா தலைவராக சவுந்தரபாண்டியனும், துணை தலைவராக கருப்பன், செயலாளராக மாரியப்பன், துணை செயலாளராக வெங்கடேஷ், பொருளாளராக திவாகர் தேர்வு செய்யப்பட்டனர். கோவிந்தன் நன்றி கூறினார்.
குறிச்சொற்கள்: சிறப்பு, செய்திகள், தலைப்பு, தேங்காய் கொள்முதல் நிலையம் விவசாயிகள் மாநாட்டில் வலியுறுத்தல்
பகிர்தல் மிக எளிமையானது,அழகானது