இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

பணி நிரந்தர சட்டம்: தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு விலக்கு கோரிய மனுக்கள் தள்ளுபடி

தேயிலைத் தோட்ட தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்வதிலிருந்து விலக்கு அளிக்கக் கோரிய மனுக்களை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.தொழிலாளர் நலன்களைக் காக்கும் வகையில் தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் ​(தொழிலாளர் பணி நிரந்தரம்)​ சட்டம் இயற்றப்பட்டது.​ இந்த சட்டத்தின் படி,​​ தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களும் பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டும்.சில தொழில் நிறுவனங்களுக்கு விலக்கு அளிக்கவும் இந்த சட்டத்தின் 9}வது பிரிவில் வகை செய்யப்பட்டிருந்தது.இந்தப் பிரிவின் படி,​​ தேயிலைத் தோட்டங்களின் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்வதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று தேயிலை தோட்ட நிறுவனங்கள் சார்பில் அரசுக்கு மனு அனுப்பப்பட்டது.ஆனால்,​​ இந்த மனுவை தமிழக அரசு 01.08.2000}ல் நிராகரித்தது.இதை எதிர்த்து மூணாறில் உள்ள டாடா தேயிலை நிறுவனம்,​​ மணிமுத்தாறு எஸ்டேட்டில் உள்ள பம்பாய் பர்மா தொழில் நிறுவனம் ஆகியவற்றின் சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.""தேயிலைத் தோட்டம் என்பது ஒரு குறிப்பிட்ட பருவங்களில் ​ மட்டுமே செய்யப்படும் தொழில் ஆகும்.​ இதில்,​​ தொழிலாளர்கள் தாற்காலிகமாக மட்டுமே பணிபுரிகின்றனர்.​ எனவே,​​ பணி நிரந்தர சட்டத்திலிருந்து தேயிலைத் தோட்ட நிறுவனங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும்'' என்று அவற்றில் கோரப்பட்டது.நீதிபதி கே.சந்துரு முன்னிலையில் இந்த மனுக்கள் விசாரணைக்கு வந்தன.இந்த வழக்கில் தொழிலாளர் தரப்பில் சரவண பவன்,​​ ஜார்ஜ் வில்லியம்ஸ்,​​ சரவண வேல் உள்ளிட்டோர் ஆஜராயினர்.விசாரணைக்குப் பிறகு நீதிபதி பிறப்பித்த உத்தரவு:மனுதாரர்கள் கோரிய நிவாரணத்தை அளித்தால்,​​ காலனி ஆதிக்கத்தின் போது தொழிலாளர்கள் சுரண்டப்பட்ட நிலையே மீண்டும் ஏற்படும்;​ தொழில்கள் மீதுள்ள சமூகக் கட்டுப்பாடு இல்லாமல் போய்விடும்.தொழிலாளர்களுக்கு உரிமையை மறுக்க முடியாது.​ எனவே,​​ இந்த மனு தள்ளபடி செய்யப்படுகிறது.தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கான பணி நிரந்தரப் பலன்கள்,​​ இந்த வழக்கின் மூலம் பத்தாண்டுகளுக்கும் மேலாக தடைசெய்யப்பட்டுள்ளது.​ எனவே,​​ மனுதாரர்களுக்கு ரூ.​ 2 ஆயிரம் வழக்குக் கட்டணம் விதிக்கப்படுகிறது.​ இந்தத் தொகை தொழிலாளர்கள் நல நிதிக்கு 4 வாரங்களுக்குள் செலுத்தப்பட வேண்டும் என்று நீதிபதி உத்தரவில் தெரிவித்துள்ளார்.

குறிச்சொற்கள்: , , ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment